மணிமேகலை மாவை லாவகமாக வீசுவதும்...ஹாசன் அசால்ட்டாக அடுப்பில் போடுவதும்.. கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: பரோட்டா கடையையும் விட்டு வைக்காத மணிமேகலையின் அட்ராசிட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தினமும் வீடியோ வெளியீட்டு ரசிகர்களுக்கு கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மழை நேரத்தில் பரோட்டாக் கடையில் இவர்கள் செய்யும் வேலையை பார்த்து நாங்களும் வரவா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தை கலக்கும் தம்பதி
ஷோசியல் மீடியாக்களில் ஒவ்வொரு செலிபிரிடிகளும் தங்களது திறமையை தனித்தனியாக கட்டி வந்தாலும்... ஒரு சில சில செலிபிரிட்டிகள் மட்டுமே 'ராஜா- ராணி'புகழ் 'சஞ்சீவ் -ஆலியா போன்று ஜோடியாக சமூக வலைதளங்களை கலக்கி வருகின்றனர். தற்பொழுது அவர்களுக்கே டப்பு கொடுக்கும் ஜோடியாக ஹாசன்- மணிமேகலை ஜோடி ஷோசியல் மீடியாக்களை ஆக்கிரமித்து வருகின்றனர்.இவர்கள் போடும் வீடியோக்களும் வலைதள வாசிகளிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

தொகுப்பாளராக அறிமுகம்
சன்மியூசிக் புகழ் 'விஜே மணிமேகலை' 90'ஸ்கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை பெரும்பாலான இளைஞர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்.அந்த அளவிற்கு தனது நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்டைலால் பிரபலமாய் இருக்கிறார். இவர் ஒருமுறை சன் மியூசிக்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது.. அதனிடையே ஒளிபரப்பப்பட்ட லாரன்ஸ் பட பாடலில் ஆடிய இளைஞரின் நடனத்தால் கவரப்பட்டு.. அவரை பாராட்டுவதற்காக இவர் தொடர்பு கொண்டது இறுதியில் காதலில் வந்து முடிந்தது.அந்த இளைஞர் தான் தற்பொழுது விஜே மணிமேகலை காதலித்து திருமணம் முடித்து இருக்கும் சினிமா நடன உதவி இயக்குனர் ஹாசன் ஆவார்.

காதல் திருமணம்
மதத்தை காரணம் காட்டி இவர்களுடைய காதலுக்கு மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு கிளம்ப தன் பெற்றோரை எதிர்த்து ஹாசனை திருமணம் செய்து கொண்டார் .இவரது கணவர் டான்ஸ் சூட்டிங்கில் பிஸியாக இருக்க, இவரும் சின்னத்திரையில் போட்டியாளர்,வர்ணனையாளர், பேச்சாளர், என்ற பன்முகத் திறமை யோடு ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே தனியாக யூடியூப் சேனல்கள் வெற்றிகரமாக நடத்திவருகிறார். யூடியூப் சேனலில் தங்களது அன்றாட நடவடிக்கைகளை வீடியோவாக அப்லோட் செய்து வருவது இவர்களது பாலோயர்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கிராமத்தில் கலக்கும் காதல் ஜோடி
தன் கணவர் ஹாசனுடன் அவ்வப்போது கிராமத்திற்குச் செல்லும் மணிமேகலை..அங்கு அந்த ஊர்க்காரர்கள் உடன் இணைந்து செய்யும் குறும்புத்தனங்கள் வீடியோவாக எடுத்து போஸ்ட் செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.கொரனா ஊரடங்கு காலத்தில் இவர் போட்ட வீடியோக்கள் அனைத்தும் பாசிட்டிவ் கமெண்டுகளையே பெற்று வைரலானது.ரீசன்ட் ஆக கிராமத்தில் ஹோட்டலில் சாப்பிடப் போன ஜோடி புரோட்டா சாப்பிடுவதை விட்டுவிட்டு, புரோட்டா தயாரிப்பதில் இறங்கிவிட்டனர் போல!! ரீல்ஸ் வீடியோ விற்காக புரோட்டா போடுவது போல் இவர்கள் செய்துள்ள பெர்பாமன்ஸ்யை பார்த்த நெட்டிசன்கள்..'அக்கா மணிமேகலை மாவை லாவகமாக வீசுவதும்..., அண்ணன் ஹாசன் அதை அசால்டா அடுப்பில் போடுவதும்...ஒரே கூத்து தான்....போங்க' என்று வடிவேலு பாணியில் கலகலப்பாய் கலாய்த்து வருகின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
கனமழையின் காரணமாக சென்னையை ஸ்தம்பித்துப் போய் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், சென்னைக்கு திரும்புவதாக இவர்கள் போட்டுள்ள வீடியோவைப் பார்த்த இவர்களது அபிமான ரசிகர்கள் இப்ப.. வராதீங்க.. ரெண்டு.. மூணு நாள் கழித்து வாருங்கள்..! என்று அட்வைஸ் செய்தாலும், சில ரசிகர்கள் "வாங்க.. வாங்க.. வாங்குறதுக்கு.. வாங்கோ..!" என்று நக்கலாய் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications