Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலுங்கி, குலுங்கி காற்றில் பறக்கும் கேப்ரில்லா...அனலடிக்கும் மூச்சுக்காற்றில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : கையை வீசி, வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி ஆட்டம் போட்ட கேப்ரில்லாவை பார்த்து நோட்டம் போட்டு ஓடி வந்த ரசிகர்களின் கூட்டம் இன்ஸ்டாகிராமில் அலைமோதுகிறது.

வெள்ளைச் சுடிதாரில் கொள்ளை கொள்ளும் அழகை காட்டி இப்படி எல்லாம் ரசிகர்களை கட்டி இருக்கலாம் என பல பேருக்கு புரிய வைத்திருக்கிறார்.

என்ன சொன்னாலும் அந்த குழந்தை சிரிப்புக்கு முன்பு வேறெதுவும் பெரியதாக தெரியவில்லையே என குதூகலிக்கும் ரசிகர்கள் கமெண்ட்களில் கொஞ்சுகின்றனர்.

ஃப்ரீ டைமில் கொண்டாட்டம்தான்

ஃப்ரீ டைமில் கொண்டாட்டம்தான்

ட்ரெண்டிங்க் பாட்டுக்கு பல பேர் ரீல்ஸ் வீடியோக்களை போட்டாச்சு நாம போடாம இருந்தா எப்படி என்று இப்போ கேப்ரில்லாவும் கலக்கலான ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு விட்டார். இவர் வீடியோ வெளியிட்டது தான் வெளியிட்டார் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்துவிட்டனர். சும்மாவே இவருடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கிறது, இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்திலும் இவர் கலக்கல் ஆட்டம் போட்டிருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் கலக்கலாக கமெண்ட் களையும் போட ஆரம்பித்துவிட்டனர். தங்களுடைய பங்குக்கு கேப்ரில்லாவிற்கு எனர்ஜியை ஊட்டுவதுதான் அவருடைய ரசிகர்களுக்கு பெரிய வேலையாக இருக்கிறது போல.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரைக்கும் கேப்ரில்லா
இளைஞர்களை மட்டுமே அதிகமாக கவர்ந்து கொண்டு வந்தார்.ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பெண்களையும் கவர்ந்துவிட்டார். தன்னுடைய நடன திறமையினால் அனைவருக்கும் டப் கொடுத்துக் கொண்டிருக்கும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் பெருகிக்கொண்டே வருகிறது. பிக் பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தற்போது பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் இவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் ரசிகர்களின் பேராதரவோடு தான் கடைசி வரைக்கும் அந்த வீட்டிற்குள் இருந்து கொண்டு இருந்தார். அதுபோல இப்போதும் மீண்டும் ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

மாறாத குழந்தை மனது

மாறாத குழந்தை மனது

கேப்ரில்லா திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக சீரியல்களில் அறிமுகமாகியிருக்கிறார். அதுவும் விஜய் டிவியில் ஏழாம் வகுப்பு c' பிரிவு இல் இவர் ஒரு பள்ளி மாணவியாக நடித்திருப்பார். ஏற்கனவே இந்த சீரியல் குழந்தைகளை மட்டும் அல்லாமல் குழந்தை வாழ்க்கையை மிஸ் பண்ணுனவர்களையும் ரொம்பவே பீல் பண்ண வைத்திருந்தது இந்த சீரியல்தான். இதில் இவரும் நடித்து இருப்பது பலபேருக்கு தெரியாவிட்டாலும்,இவர் அந்த சீரியலில் கேபி கேரக்டரில் நடித்து இருப்பதை பலரும் பார்த்து இருப்பார்கள். அது வேறு யாருமில்லை கேப்ரில்லா தான். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே இவர் விஜய் டிவியில் ஜோடி ஜூனியர் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அடடா....என்ன சிரிப்பு

அடடா....என்ன சிரிப்பு

சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருக்கும் போதே சினிமாக்களில் இவருக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தனுஷ் நடித்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கச்சியாக நடித்திருந்தார். அதற்குப் பிறகும் ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு வரிசையாக கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் மீண்டும் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அந்த வயதிலேயே அப்படி என்றால் இப்போ கேக்கவா வேணும்! இவருடைய ஆட்டத்தை நான் குமரியாக மாறினாலும் என் திறமையும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று தற்போது மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் இவருடைய புதுமையான ஆட்டத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் மயங்கிப் போய் விட்டார்கள். அப்படியே வெள்ளை கலர் சுடிதாரில் தேவதை போல இவர் இடுப்பை ஆட்டி ஆடின அழகைப் பார்த்து பலர் கமெண்ட் களில் சமூக வலைத்தளத்தை கதிகலங்க வைத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+