அதகளம் பண்ணுவாரா.. விஸ்வரூபம் எடுக்கப் போகும் வித்யா.. ரசிகர்கள் வெயிட்டிங்!
சென்னை: வித்யா பிரதீப் சினிமாவில் முழு மூச்சா களம் இறங்கப் போகிறார். அவர் புக் ஆகியுள்ள புதிய படத்தில் அவரது நடிப்புக்கு பெருத்த தீனி கிடைக்கும் போலத் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
வெள்ளித்திரைதான் வித்யாவுக்கு முதல் மேடை. அங்கிருந்து சின்னத்திரைக்கு வந்தார். இப்போது மீண்டும் வெள்ளிதிரைக்குப் போயுள்ளார். சின்னத்திரையில் இருந்து மீண்டும் வெள்ளித்திரைக்கு போனாலும் போட்டோஷூட்களில் தொடர்ந்து லைம்லைட்டில் இருந்து வருகிறார்.
செமையான மாடல் உடையில் கலக்கல் ஆட்டம் போட்டிருக்கும் வித்யா பிரதீப் வீடியோஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இதில் பல விளம்பரங்களில் எடுத்த போட்டோக்களை அப்லோட் பண்ணி வருகிறார்.

டான்ஸர்
குழந்தைப் பருவத்திலேயே பரதநாட்டியம் முறைப்படி கற்று இருக்கிறார். தனது பிஎச்டி படிப்பு முடித்ததும் ஒரு மாடலாக பணியாற்றினார். படிக்கும்போது நடிக்க கூடாது என்று இவரின் வீட்டில் சொல்லி விட்டதால் இவர் தனது ஆசையை டிகிரி முடித்ததும் நிறைவேற்றிக் கொண்டார். முதலில் அவர் மாடலாகவும் பின்பு அதிலிருந்து ஏ ஆர் ரகுமானின் ஸ்டூடியோ ஆல்பங்களில் மியூசிக்கல் சாங்குகளிலும் நடித்திருக்கிறார் .

தடம் படத்தில் அசத்தல்
முதன் முதலில் அவள் பெயர் தமிழரசி என்னும் படத்தின் மூலம் சிறிய வேடத்தில் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விருந்தாளி என்னும் படத்தில் கதாநாயகியாகவும் .சைவம் படத்தில் குட்டி பாப்பா சாராவின் அம்மாவாகவும் நடித்திருந்தார். அதன் பிறகு பசங்க 2 விலும் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படங்களில் கிடைக்காத பெருமை இவருக்கு தடம் படத்தில் கிடைத்தது.

கண்ணாலேயே உருட்டல்
இந்த படத்தில் இவர் அழகான போலீசாக நடித்து இருப்பார். அதுவும் இவர் கண்ணை உருட்டி அருண் விஜய்யை முறைக்கும் சீன்களில் செமயாக நடித்திருப்பார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சின்னத்திரையில் இருந்து அழைப்பு வந்ததும் கதையின் தாக்கத்தையும் கேரக்டரில் உணர்வையும் புரிந்துகொண்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.

நாயகி சீரியல் ஆனந்தி
சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் முதலில் விஜயலட்சுமி நடித்துக் கொண்டிருந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த சீரியலில் இருந்து வெளியேறினாலும் அதேபோல ஒரு சினிமா பிரபலத்தை நடிக்க வைத்தால் நல்லா இருக்கும் என்று எதிர்பார்த்துதான் இவரிடம் அணுகியிருக்கிறார்கள். இவரும் திரைப்படங்களில் நடிப்பது போல தான் அதை விடவும் சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று உடனே சம்மதம் தெரிவித்தார்.

ரசிகர்கள் ஜாஸ்தி
நாயகி சீரியலில் ஆனந்தியாக நடித்தார் என்பதை விடவும் கேரக்டராகவே மாறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவர் நடிப்பு தத்ரூபமாக இருக்கும். இதனால் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரியதாய் வந்தது வெள்ளித்திரையில் நடிக்கும்போது இருந்ததை விடவும் சின்னத்திரையில் இவருக்கு பல மடங்கு ரசிகர்கள் கூடினார்கள். இவர் ஒரு சயின்டிஸ்ட் என்பதும் முதலில் பலருக்கு தெரியாது ஆனால் இந்த சீரியலில் இவர் நடித்து முடித்த பிறகு தான் பலருக்கும் தெரிந்திருக்கிறது.
இவர் நாயகி சீரியலில் இருந்து வெளியேறியதும் பல ரசிகர்கள் இவரை ரொம்பவும் மிஸ் பண்ணி இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து அவர்களுக்கு இவர் இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார். எனக்கு அந்த சீரியலில் கால்ஷீட்டுக்கு முடிந்து விட்டதால் நான் என்னால் தொடர முடியவில்லை .ஆனால் இனி உங்களுடன் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து இருப்பேன் என்றும் கூறியிருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.

இன்ஸ்டாகிராமில் பிசி
அடிக்கடி போஸ்ட்களை போட்டுக்கொண்டு ஆக்டிவாக இருந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். தற்போது இவர் எக்கோ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். டாக்டர் ராஜசேகர் மற்றும் ஷாரோன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ்இயக்குகிறார்.

சினிமாவில் விஸ்வரூபம்
முக்கிய வேடத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். தடம் ,தூள் ,கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. தற்போது இதன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் இந்த படத்திற்கான நோட்டீசை அப்லோட் பண்ணி இருக்கிறார். .அவரது ரசிகர்களுக்கு இவரை மறுபடியும் வெள்ளித் திரையில் பார்ப்பது கொண்டாட்டமாகவே இருக்கிறது. மீண்டும் சினிமாக்களில் நடிக்க போகிறேன் என்று சொன்னதும் ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications