அடடடடடடடா.... ஒரே மாதிரி எத்தனை.. கடுப்பாகும் ரசிகர்கள்!
சென்னை : கடந்த 30 ஆண்டுகளில் டிவி சேனல்களின் வளர்ச்சி அபாரமானது என்றே சொல்லலாம். அதற்கு முன் டிவி சேனல் என்றாலே தூர்தர்ஷன், பொதிகை டிவி, சன் டிவி, ஜெயா டிவி என ஓரிரு டிவி சேனல்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அனைத்து மொழிகளிலும் நூற்றுக் கணக்கில் தனியார் டிவி சேனல்கள் இயங்கி வருகின்றன. இதில் சர்வதேச சேனல் முதல் உள்ளூர் சேனல் வரை அடங்கும்.
துவக்கத்தில் மக்களை ஈர்ப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு அனைத்து சேனல்களும் புது புது டிவி நிகழ்ச்சிகளை தயாரித்து, ஒளிபரப்பி வந்தன. பிறகு சினிமா பாடல்கள், சினிமாக்கள், சீரியல்கள் என்று வந்தன. இதனால் எந்த சேனலை பார்ப்பது என தெரியாமல் குழம்பும் நிலைக்கு மக்கள் வந்தனர். ஆனால் இன்று நிலைமையே வேறு மாதிரி ஆகி விட்டது. வாசகர்களை கவர புதிய நிகழ்ச்சிகளை துவக்குவதற்கு பதிலாக, ஏதாவது ஒரு டிவி.,யில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால், அதே போன்ற நிகழ்ச்சியை மற்ற சேனல்களும் ஆரம்பித்து விடுகின்றன.

மெகா சீரியல்களின் துவக்கம்
தமிழில் மெகா சீரியல்களை பிள்ளையார்சுழி போட்டு துவக்கி வைத்த பெருமை சன் டிவி.,யை தான் சேரும். இதே போல் ரியாலிட்டி ஷோக்களை அறிமுகம் செய்த பெருமை விஜய் டிவி.யையே சேரும். துவக்கத்தில் சன் டிவி.,யில் மட்டும் தான் மெகா சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டன. இப்போது மெகா சீரியல்கள் இல்லாத டிவி சேனலே இல்லை என்ற அளவிற்கு ஆகி விட்டது. இதே போன்று இசை நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்த பெருமையும் சன் டிவி.,யையே சேரும்.

ரியாலிட்டி ஷோக்கள்
துவங்கியது சன் டிவி என்றாலும் ரியாலிட்டி ஷோக்களை அதிகம் நடத்தி, அவற்றில் வெற்றியும் கண்டது விஜய் டிவி. அதிகமாக ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டிவி.,யில் தான் ஒளிபரப்பாகி வருகின்றன. துவக்கத்தில் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றி அடைந்த நிகழ்ச்சிகளை தமிழில் மொழிமாற்றம் செய்து வந்த விஜய் டிவி, தற்போது பலவிதமாக நிகழ்ச்சிகளை தானே தயாரித்து வருகிறது.

ஒருவரை பார்த்து மற்றவர்
டிவி சீரியல்கள் தான் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்றால், ஒரு சேனலில் வெற்றி பெற்று, புகழடையும் நிகழ்ச்சியும் மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. உதாரணமாக ஸ்டார் டிவி.,யில் முதல் முறையாக அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது உலக அளவில் புகழடைந்ததால், தமிழில் பல சேனல்களில் கோடீஸ்வரன், கோடீஸ்வரி, நீங்களும் லட்சாதிபதி ஆகலாம், உங்களில் யார் அடுத்த கோடீஸ்வரன் என பல பெயர்களில், பல முன்னணி நடிகர், நடிகைகள் தொகுத்து வழங்கி வந்தனர்.

காப்பியோ காப்பி
இதைத் தொடர்ந்து விவாத நிகழ்ச்சிகள், பாட்டு போட்டி, நடன போட்டி, சூப்பர் ஜோடி, ஜோடி பொருத்தம், சூப்பர் குடும்பம், குடும்பங்களின் பிரச்னைகளை அலசுவது என பல நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து பல சேனல்களில் நடத்தப்பட்டன. இந்த வரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. முதன் முதலில் நெதர்லாந்தில் பிக் பிரதர் என்ற பெயரில், பிரபல மாடல்களை வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதே தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் முதன் முதலில் இந்தியில் பிக்பாஸ் என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சியை நடத்தியது.

ஸ்தம்பிக்க வைத்த பிக்பாஸ்
நடிகை ஷில்பா ஷெட்டியால் இந்தியாவில் புகழ்பெற்ற பிக்பாஸ், பிறகு பெங்காலி, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு பரவியது. தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என 7 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை அனைத்து மொழிகளிலும் ஒரே நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனைத்து மொழிகளில் கிடைத்த வரவேற்பு, மற்ற சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை ஆட்டம் காண செய்துள்ளது.

வரிசை கட்டும் சமையல் நிகழ்ச்சி
தமிழில் பிக்பாசை போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சியும் உலக புகழ் பெற்றதால் தற்போது சன் டிவி, ஜி டிவி என பலவற்றிலும் இதே போன்ற சமையல் போட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யூட்யூப்பில் ஆயிரக்கணக்கான சமையல் சேனல்கள் இருக்கும் போது, டிவி சேனல்களும் சமையல் நிகழ்ச்சிகளில் போட்டி போட்டு இறங்கி உள்ளது ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

எல்லா சேனலிலும் பிக்பாஸா
ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் பாட்டு போட்டி, நடன போட்டி, ஸ்டாண்ட்அப் காமெடி நிகழ்ச்சி என ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் பல சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது சமையல் போட்டி நிகழ்ச்சியும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. இதனால் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். நல்லவேளை புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் நம்பர் ஒன்னாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரே நிறுவனம் தான் தயாரிக்கிறது. அதனால் ஒரு மொழிக்கு ஒரே சேனல் என்ற விகிதத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இல்லா விட்டால் அனைத்து சேனல்களும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியை நடத்தி விடும் என பலர் வேதனை தெரிவிகின்றனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications