தனுஷ் பற்றி பெருமையாக பேசிய விக்னேஷ் சிவன்.. ஆனால், நயன்தாரா வெளியிட்ட பதிவு! இதுதான் பதிலடியா?
சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகர் தனுஷ்... இந்த மூவரையும் சுற்றி மீண்டும் ஒரு புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. காரணம், சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி. இந்த பேட்டி வெளியான பிறகு பல விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

விக்னேஷ் சிவன் பேட்டி
விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் தனுஷ் குறித்து மிகுந்த மரியாதையுடனும், பாசத்துடனும் பேசியிருந்தார். "தனுஷ் எனக்கு ஒரு சாதாரண நண்பர் இல்லை... என் வாழ்க்கையில் முக்கியமான இடம் வைத்தவர். அவரை நான் ரொம்ப உயரமாக நினைக்கிறேன்.
தனுஷின் பிறந்தநாள் ஜூலை எட்டாம் தேதி, அதே ஜூலை எட்டாம் தேதியில் தான் என்னுடைய அப்பா இறந்தார். அதனால் அவரை நான் என்னுடைய அப்பா இடத்தில் வைத்திருக்கிறேன். சிலரை எதற்காக பிடிக்கும் என்று தெரியாது. ஆனால் அவர்களுடைய பந்தம் நமக்கு ஒரு பெரிய நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், இருவருக்கிடையே ஏற்பட்ட பிரிவு தன்னுடைய வாழ்க்கையில் பெரிய இழப்பு என்றும் மனம் திறந்தார்.
நட்பும் பிரிவும்
இதோடு, "என்ன தவறு நடந்தது எனக்கு கூட சரியாக தெரியவில்லை... ஆனா அந்த நட்பை நான் இழந்தது எனக்கு வேதனைதான்" என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது.ஆனால், இதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் வேறொரு பேச்சு கிளம்பியது. ஏற்கனவே நயன்தாரா தரப்பில் தனுஷ் மீது விமர்சனங்கள் வந்திருந்த சூழலில், இப்போது விக்னேஷ் சிவன் இப்படியாக அவருக்கு ஆதரவாக பேசுவது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இந்த பேட்டி வெளியானதும், பழைய 'நானும் ரவுடிதான்' சம்பவம் மீண்டும் இணையத்தில் வைரலாக ஆரம்பித்துவிட்டது. அந்த படத்தை தனுஷ் தயாரித்தது தெரிந்த விஷயம். பின்னர், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை அடிப்படையாக கொண்டு வெளியான டாக்குமென்ட்ரி "Nayanthara: Beyond the Fairytale" படத்தில், 'நானும் ரவுடிதான்' படத்தின் சில விநாடி காட்சிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறி, தனுஷ் தரப்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
அதிலும், அந்த காட்சிகளுக்காக சுமார் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக வந்த செய்தி அப்போது பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதுவே நயன்தாரா - விக்னேஷ் சிவன் - தனுஷ் மூவருக்கும் இடையிலான உறவை முறிக்கும் முக்கிய காரணமாக பேசப்பட்டது.

ரசிகர்கள் கருத்து
இப்படி ஒரு பின்னணி இருக்கும்போது, விக்னேஷ் சிவன் திடீரென தனுஷை புகழ்ந்து பேசுவது பலருக்கும் சற்று ஷாக் தான். இதனால் விக்னேஷ் சிவன் பேசியது வீட்டுக்குள்ள பிரச்சனை ஆகுமா?", "நயன்தாரா இதை எப்படி எடுத்துக் கொள்வார்?" என்ற கேள்விகளும் எழ ஆரம்பித்தது. சில நெட்டிசன்கள் இதை கிண்டலாக எடுத்துக் கொண்டு, "இன்னைக்கு நீங்க வீட்டுக்கு வெளியே தான் தூங்கணும் பாஸ்!" என்று கலாய்த்து கமெண்ட்ஸ் போட ஆரம்பித்தனர்.
நயன்தாரா பதிவு
இப்படி ஒரு பக்கம் விமர்சனமும், மீம்ஸும் ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கம் நயன்தாரா செய்த ஒரு செயல் இந்த எல்லா பேச்சுக்கும் சற்று பிரேக் போட்ட மாதிரி அமைந்தது.
அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கிய 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிரைலரை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, அவருக்கு முழு ஆதரவு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், "இது தான் ரியல் பதிலடி... வீட்டுக்குள்ள எல்லாம் ஓகே தான் போல!" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால், "விக்னேஷ் சிவன் - தனுஷ் நட்பு மீண்டும் தொடங்குமா?", "நயன்தாரா இதை எப்படி பார்க்கிறார்?" என்ற கேள்விகளோடு இந்த விவகாரம் இன்னும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
சீமானுடன் நடிக்கும் போது நடந்த சம்பவம்.. வெளிப்படையாக பேசிய நடிகை கிரித்தி ஷெட்டி! குவியும் கமெண்ட்ஸ் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு













Click it and Unblock the Notifications