சங்கீதாவின் உண்மையான முகமே இதுதான்! உதவி செய்தவருக்கு வைத்த ஆப்பு.. விஜயின் முன்னாள் உதவியாளர் ஓபன்
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ( Vijay Again Controversy ) குறித்து மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. அவரது முன்னாள் உதவியாளராக இருந்த டி.ஆர். ரமேஷ், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக மனைவி சங்கீதா பற்றியும் பல கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
விஜய்-சங்கீதா காதல் திருமணம் செய்துகொண்டது ரசிகர்களுக்கு புதிய விஷயம் அல்ல. ரசிகையாக இருந்த சங்கீதா, பின்னர் விஜயை காதலித்து, இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த தம்பதியரைச் சுற்றி சமீபத்தில் விவாகரத்து வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டு தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

குறிப்பாக, சங்கீதா விஜய் மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்ததாக வெளியான தகவல்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், பல தரப்பிலிருந்து கருத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.
இந்த நிலையில், டி.ஆர். ரமேஷ் கூறிய சில தகவல்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரது பேட்டியில், சங்கீதா விஜய்க்கு நெருக்கமானது அவருடன் பல வருடங்களாக இருந்த உதவியாளர் ராஜன் மூலமாகத்தான் என அவர் தெரிவித்துள்ளார். "ஆரம்பத்தில் ராஜன் தான் இப்படிப்பட்ட பெண் நல்லவர், நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று விஜயிடம் பேசியவர். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்த ராஜனையே வீட்டிலிருந்து விலக்கி வைத்தது சங்கீதாதான்" என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் சங்கீதாவின் குணநலன் பற்றி யோசிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது முதல் சர்ச்சை அல்ல. சில மாதங்களுக்கு முன் டி.ஆர். ரமேஷ் மற்றொரு பேட்டியில், தாம் விஜயிடம் உதவியாளராக இருந்தபோது நடந்த சம்பவங்களை பகிர்ந்திருந்தார். "ஒரு நாள் விஜய் மிகவும் கோபமாக போனில் பேசிக் கொண்டிருந்தார். நான் அவருக்கு சாப்பாடு பரிமாறும் போது, சாப்பாட்டில் ஒரு முடி இருந்ததற்காக என்னை எட்டி மிதித்து கீழே தள்ளிவிட்டார். அதற்காக மறுநாளும் மன்னிப்பு கேட்கவில்லை" என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், தன்னுடைய மகள் திருமணத்திற்கு விஜயை அழைத்தபோது, பல வருடங்களாக அவரிடம் உதவியாளராக வேலை பார்த்த போதும், 2000 ரூபாய் மட்டும் மொய் கொடுக்க சொல்லியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த தகவல்கள் அப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கிடையில், விஜய் சமீப காலமாக அரசியல் தளத்திலும் அதிக கவனம் பெற்றுள்ளார். தனது அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. குடும்ப விவகாரம், தனிப்பட்ட குற்றச்சாட்டு, அரசியல் விமர்சனம்-இவை அனைத்தும் ஒரே நேரத்தில் விஜயைச் சுற்றி சுழல்கின்றன.
சங்கீதா தொடர்பான வழக்கு குறித்து இதுவரை விஜய் தரப்பிலோ, சங்கீதா தரப்பிலோ விரிவான விளக்கம் வெளியாகவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் இதுகுறித்து பல்வேறு ஊகங்கள் மற்றும் ஆதரவு-எதிர்ப்பு கருத்துகள் தொடர்ந்து பரவி வருகின்றன.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications