ஒரே விமானத்தில் விஜய்- திரிஷா கோவா சென்றார்களா? சுற்றி வரும் போட்டோஸ் உண்மையா?
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி திருமணம் நேற்று கோவாவில் நடைபெற்ற போது அந்த திருமண பங்க்ஷனில் விஜய் மற்றும் திரிஷா கலந்து கொள்வதற்காக ஒரே விமானத்தில் சென்றதாக புகைப்படங்கள் வெளியாகி பரவி வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் சமயத்தில் அவர் பற்றி பல வதந்திகளும் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு விஜய் உடைய மனைவி அவரை விட்டு பிரிந்து இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுபோல த்ரிஷாவுடன் விஜய் டேட்டிங் செய்வதாகவும் சில வதந்திகள் பரவி வருகிறது. இது அரசியல் மற்றும் சினிமாவில் இருப்பவர்களுக்கு புதியதல்ல.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் சேர்ந்து பைரவா மற்றும் சர்க்கார் என்ற இரண்டு படங்களில் நடித்த போது இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விஜய், கீர்த்தி சுரேஷை தன்னுடைய நண்பர் வீட்டின் மாடியில் குடி அமர்த்தி இருப்பதாகவும் கூட செய்திகள் வைரல் ஆகி வந்தது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சில வாரங்களுக்கு முன்பு தான் 15 வருடங்களாக ஆண்டனியை காதலித்து வருவதாக கீர்த்தி சுரேஷ் பதிவு வெளியிட்டு இருந்தார்.
அதுபோல சில மாதங்களுக்கு முன்பு திரிஷா விஜய் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்ட போது இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? அதனால் தான் விஜய் மனைவி பிரிந்து விட்டாரா? என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டது.

இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நேற்றிலிருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் விஜய் கோடு போட்ட நீல நிற சட்டை அணிந்திருக்கும் போது திரிஷா எளிமையான வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரே விமானத்தில் பயணித்ததாக விமான டிக்கெட்டும் பரவி வருகிறது. விமான நிலையத்தில் செக்கிங் செய்யும்போது எடுத்த வீடியோ என்று ஒரு வீடியோவும் பரவி வருகிறது.
BIRD airport service (Chennai) private limited passenger Manifest என்ற விமானத்தில் விஜய் த்ரிஷா உட்பட ஆறு பேர் பயணித்ததாக டிக்கெட் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் அதிகமானோர் ஒரே துறையில் ஒன்றாக பழகியவர்கள்.
ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது ஒன்றாக செல்வது ஒன்றும் தவறில்லை. இது வேண்டும் என்றே விஜய் மற்றும் திரிஷா மீது அவதூறு பரப்பும் வகையில் இருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

இருப்பினும் தனி விமானத்தை புக் செய்தது யார், அந்த விமானத்தில் வேறு சிலர் பயணித்ததாக லிஸ்டில் இருந்தாலும் திரிஷா மட்டுமே அறியப்படும் நபராக இருப்பது ஏன், வேறு நடிகர் நடிகைகளும் கூட போயிருக்கலாமே என்ற கேள்விகளையும் எழுப்புகிறார்கள். இந்த தகவல் உண்மையா என்பதை அறிய திரிஷா, விஜய் இரு தரப்பையும் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். இதுவரை பதில் கிடைக்கவில்லை.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications