ஜேசனோடு நேரடியாக மோதும் விஜய், திரிஷா.. அக்டோபர் 2 ம் தேதி நடக்கும் சம்பவம்!
சென்னை: சினிமாவில் ஒரு நடிகரின் மகன் ஹீரோவாகவே இயக்குனராகவோ அறிமுகம் ஆகும்போது அவருக்கு முன்னால் இருக்கும் முதல் சவால் படம் அல்ல, அவருடைய அப்பாவின் பெயர் தான். இப்போது அந்த சவாலை எதிர்கொண்டு இருப்பவர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். அவர் இயக்கியுள்ள முதல் படம் சிக்மா வரும் அக்டோபர் 2 ம் தேதி திரைக்கு வருகிறது. அதில் தான் அவருக்கு ஒரு பிரச்சனை வரப்போகிறது.
திருப்பாச்சி ரீ ரிலீஸ்
அதாவது அக்டோபர் 1ம் தேதி விஜய், திரிஷா நடித்த திருப்பாச்சி ரீ ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2005 இல் வெளியான இந்த படம் 21 வருஷத்துக்கு பிறகு மீண்டும் திரைக்கு வருகிறது. இப்போ ரசிகர்களுக்கு வந்திருக்கும் கேள்வி என்ன தெரியுமா? ஜேசன் சஞ்சய் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் கூட விஜய் பெயர் அவரை விட மாட்டேங்குது. ஜேசன் எவ்வளவு தான் தனியாக நிற்க நினைத்தாலும் அந்த பையனுக்கு இவ்வளவு சோதனை வர வேண்டாம்பா என்று ரசிகர்கள் கருத்து சொல்லி வருகின்றார்கள்.

காரணம் என்ன தெரியுமா? விஜய் ஏற்கனவே ஜனநாயகன் படத்திற்குப் பிறகு நடிக்கப்போவது இல்லை என்று அறிவித்துவிட்டார். இதனால் விஜய்யின் படம் மீண்டும் தியேட்டரில் வெளியாகுது என்பது ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். உடனே அவருடைய ரசிகர்கள் தியேட்டருக்கு அந்த படத்திற்கு தான் போவார்கள். அப்படி இருக்கும்போது சிக்மா படத்திற்கு பிரச்சனை வரத்தானே செய்யும்? ஏற்கனவே இதற்கு முன்பு விஜய்யின் படங்கள் ரீ ரிலீஸ் ஆன போது கூட அந்த படத்திற்குத்தான் அதிகம் வசூல் இருந்திருக்கிறது.
விஜய் மகனுக்கு பிரச்சனை
அதனால் விஜய் பையன் படம் வெளியாகும் சமயத்தில் கூட இப்படி அப்பா படத்தை வைத்து அவருடைய படத்தை காலி பண்ண வேண்டுமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஜேசன் சமீப காலமாக கொடுக்கும் பேட்டிகள் எல்லாம் தன்னுடைய அப்பாவை பற்றி அவ்வளவு பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய அப்பாவின் வரலாற்று வெற்றி தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் பெரிய பொறுப்பை கொடுத்திருப்பதாகவும், அப்பாவிற்கு எந்த விதத்திலும் களங்கம் வராமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னது பெரிதாக பேசப்பட்டது.
விஜய் குடும்ப பஞ்சாயத்து
அதற்கு பிறகு தான் விஜய் மீது கொடுத்த விவாகரத்து வழக்கை அவருடைய மனைவி வாபஸ் வாங்கி இருந்தார். இதனால் மொத்த குடும்பமும் ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் நாடக்கும் சூழ்நிலை எல்லாம் பார்த்தால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போலத்தான் இருக்கிறது. விஜய்யின் குடும்ப பஞ்சாயத்து ஒரு பக்கம் இருந்தாலும், அவருடைய மகன் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் சமயத்தில் கூட அவருக்கு மீண்டும் மீண்டும் இதுபோல பிரச்சனைக்கு வேண்டுமா? என்று விஜய் மகனுக்காகவே இப்போ பலர் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள்.
சிக்மா படத்தின் பிரமோஷனுக்கு விஜய் வருவாரா? என்று பலர் காத்திருந்தனர். ஆனால் விஜய் வரவில்லை. அதனாலேயே விஜய் குடும்பத்தை பற்றி மீண்டும் பேசப்பட்டு வந்தது. ஆனால் விஜய் எப்போதோ நடித்த படம் இப்போ மீண்டும் அவருடைய மகனுடன் போட்டி போடுவது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications
