"இச் இச் டான்ஸ்" இணையத்தை கலக்கும் 'Pookie ஆட்டம்' விஜய் ஆண்டனி கொடுத்த மெகா ட்விஸ்ட்! மனுஷன் தங்கம் தான்
சென்னை: சமூக வலைத்தளங்களில் தற்போது ஏஐ (AI) தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட ஒரு ஹஸ்கி வகை நாயின் 'Pookie டான்ஸ்' வீடியோ தான் காட்டுத் தீ போலப் பரவி வருகிறது! தமிழ் சினிமாப் பாடலான 'வெடி'யில் வரும் "இச் இச்" பாடலின் பின்னணியில், அந்த ஹஸ்கி நாய் துள்ளித் துள்ளி போடும் க்யூட்டான டான்ஸ் மூவ்ஸ், சைபர் உலகத்தையே கட்டிப்போட்டுள்ளது.
பல நிறுவனங்களும், பிரபலங்களும் இந்த AI டான்ஸ் ட்ரெண்டைப் பயன்படுத்தி மீம்ஸ், ரீல்ஸ், வீடியோக்கள் உருவாக்கி வரும் நிலையில், இந்த ட்ரெண்டைத் தொடங்கி வைத்தவர் யார் என்பது குறித்தத் தகவல் இப்போது வெளியாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது!

இவர்தான் அந்த Pookie
இந்த சுவாரசியமான டான்ஸ் வீடியோவைத் தயாரித்தவர் யார் என்றுப் பலரும் தேடி வந்த நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு தகவலில், இந்த 'Pookie டான்ஸ்' வீடியோவின் உண்மையான சொந்தக்காரர் நடிகர் விஜய் ஆண்டனிதான் என்று அவரதுப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் ரீல்ஸ் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில்தான், இந்த 'போக்கி டான்ஸ்' உருவானதற்கானக் காரணம் இருக்கிறது என்று ஒரு வீடியோவுடன் படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதைப் பார்த்த ரசிகர்கள், "உண்மையாகவே இதற்கு விஜய் ஆண்டனிதான் சொந்தக்காரரா?" என்று வியப்பதுடன், "விஜய் ஆண்டனியின் துள்ளலான பாடல்கள் எப்பவுமே ஹிட் தான்; இப்போது அவர் குடும்பத்தில் இருந்தே இந்த ட்ரெண்ட் ஆரம்பிச்சிருக்கே!" என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய் ஆண்டனி பயோகிராபி
விஜய் ஆண்டனி, முதலில் ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக பரிச்சயமானவர். 'நாக்க முக்கா', 'ஆத்திச்சூடி', 'இச் இச்', 'உனக்கென நான்' போன்ற இவரதுப் பல துள்ளலானப் பாடல்கள், இவருக்குப் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இசையமைப்பாளராக உச்சத்தில் இருந்தபோது, 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தனது தனித்துவமான கதைத் தேர்வுகளால் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
குடும்பம்
இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். தனது குடும்பத்தை மிகவும் விரும்பி, அவர்களைப் பற்றி பொதுவெளியில் அதிகம் பேசும் ஒரு பாசமிகு தந்தையாகவும் அவர் அறியப்படுகிறார். ஆனால் கடந்த வருடத்தில் அவருடைய மூத்த மகள் மீரா காலமான செய்தி அனைவரையும் வருத்தமடைய செய்தது. ஆனாலும் அந்த துயரத்தில் இருந்து வெளிவருவதற்காக விஜய் ஆண்டனி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தும் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.
ஓடிடியில் கலக்கும் சக்தி திருமகன்
விஜய் ஆண்டனியின் நடிப்பில் சமீபத்தில் வெளியானப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், கடந்த மாதம் வெளியான அவரது 25வது படமான 'சக்தி திருமகன்' திரைப்படம், திரையரங்குகளில் ஓரளவிற்கு வசூல் பெற்றிருந்தது. தற்போது, இந்த அரசியல் த்ரில்லர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. ஒரு தரமான அரசியல் படைப்பு என்று பாராட்டைப் பெற்ற இந்தப் படத்தைப் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூடப் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி, சினிமாவிலும் சமூக அக்கறை கொண்டவராக இருக்கும் விஜய் ஆண்டனியின் குடும்பத்தில் இருந்து ஒரு க்யூட்டான AI ட்ரெண்ட் உருவாகி இருப்பது, அவரது ரசிகர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications