சூப்பர் சிங்கரில் வாத்தியாராக அதிர வைக்கும் விஜய் ஆண்டனி.. பிரியங்காவிற்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் மே 20 மற்றும் 21ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
இந்த வாரம் இறுதி சுற்றுக்கு நேரடியாக டிக்கெட் 2 ஃபினாலே டாஸ்க் நடக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினராக விஜய் ஆண்டனி கலந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் பலருடைய பாடல் திறமையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் இன்னும் ஒரு சில எபிசோடுகளில் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வாரம் இறுதி சுற்றுக்கு நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் பாடகர் விஜய் ஆண்டனி கலந்து கொண்டிருக்கிறார். இறுதி சுற்றுக்கு போட்டி போடும் போட்டியாளர்கள் ஐந்து பேரும் தங்களுடைய இசை யுத்தத்துக்கு தயாராகி பாடல்களால் போர் தொடுக்க அதை பார்த்து விஜய் ஆண்டனி அனைவரையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒரு இசை கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கி ஒரு நடிகராகவும் பன்முக திறமையோடு வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி சமீபத்தில் தான் பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பி இருந்தார். விபத்திற்கு பிறகு ரசிகர்களின் ஆசிர்வாதத்தால் நான் மீண்டும் வந்து விட்டேன் என்று இவர் தான் நடித்து வந்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் தான் முடித்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார்.

நீங்க யாருமே சலச்சவங்க கிடையாது எல்லோருக்குமே திறமை இருக்கு என்று போட்டியாளர்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்த விஜய் ஆண்டனி அதைத்தொடர்ந்து சந்திரனும் சூரியனும் என்னும் பாடலை அபிஜித் பாடியதைக் கேட்டு, சூப்பர் பா எந்த பாட்டுல இந்த மாதிரி யூஸ் பண்ணலாம், எந்த படத்துல இந்த மாதிரி யூஸ் பண்ணலாம்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்க என்று பாராட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து மாகாபா சார் நீங்க அன்ட்டி பிகிலி ஆனால் பிரியங்கா ஆன்ட்டி பிகிலி என்று கலாய்க்க, அதற்கு விஜய் ஆண்டனி ஆமாம் அதுதான் என்று சொல்ல பிரியங்கா ஒரு நிமிடம் திகைத்துப் போய் அதிர்ச்சியாகிறார். அதைத் தொடர்ந்து மச்சக்கன்னி ஊத்திக்கிச்சி பச்ச தண்ணி பத்திக்கிச்சி என்னும் பாடலை விஜய் ஆண்டனி பாட அரங்கத்தில் அனைவரும் ஆட்டம் போடுகின்றனர். தற்போது இந்த பிரமோ வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications