ஓடிடியில் வரும் விஜய் ஆண்டனியின் நூறு சாமி.. அதுவும் எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஆண்டனி என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவருடைய வித்தியாசமான கேரக்டர்கள் தான். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கேரக்டரை சூஸ் பண்ணி நடித்துக் கொண்டிருப்பார். ஆனால் சமீபத்தில் அவர் நடித்த நூறுசாமி திரைப்படம் பெரிய அளவில் பெயர் வாங்கியது. அந்த படடத்தில் அவர் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவரை விடவும் ஹீரோயினி சுவாசிகாவிற்கு தான் அதிக முக்கியத்துவம் இருந்தது. அந்த நூறு சாமி திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் தான் இன்று விஜய் ஆண்டனியின் பிறந்த நாளில் வெளியாகி இருக்கிறது.

விஜய் ஆண்டனி படம்

நூறு சாமி திரைப்படத்தின் விஜய் ஆண்டனி கமிட்டானதுமே இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டதால் கதையும் பெரிதாக எதிர்பார்ப்பிலேயே இருந்தது. ஆனால் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன ஆரம்பத்தில் பெரிதாக ஓபனிங் இல்லாமல் இருந்தாலும் படம் பார்த்த ரசிகர்களின் வாய்மொழி பாராட்டல் மெதுவாக வேகம் பிடித்து நல்ல வரவேற்பு பெற்றது.

குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் இந்த படம் அதிகமாக பேசப்பட்டது. இப்போது விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது வரும் ஆகஸ்ட் மாதம் ஜி5 தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் நூறுசாமி வெளியாக உள்ளது.

Nooru Saami OTT Vijay Antony ZEE5 5

நூறு சாமி ஓடிடி அப்டேட்

ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர எந்த தேதி என்று அதில் சொல்லவில்லை. அதனால் எப்படியும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால் அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரத்தில் படம் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் கதையை பார்த்தால் ஒரு சிங்கிள் மதர் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள், சோசியல் அழுத்தம், வயது கடந்த பிறகு மறுமணம் செய்வது போன்ற பல பிரச்சனைகளை சொல்லும் விதமாகத்தான் இந்த படத்தின் கதை இருந்தது.

ஒரு பெண்ணின் வலி

பொதுவாக எல்லா படங்களிலும் அம்மா கேரக்டர் என்றாலே தியாகமாக பேசப்படும். ஆனால் இந்த படத்தில் அம்மாவுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு அவங்களை கடவுளாக பாக்காமல் அவங்கள மனுஷங்களா பார்த்தாலே போதும் என்று ஒரு நீதியைத்தான் படத்தின் கதை சொல்கிறது. கணவனோ மனைவியோ இழந்து விட்டால் தனியாகத்தான் வாழவேண்டும் என்று இந்த சமூகம் ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது. அதை எதிர்த்து தான் எந்த படத்தின் கதை பேசியது.

Nooru Saami OTT Vijay Antony ZEE5 5

ஆதரவு கிடைக்குமா?

அதுவும் உண்மையாக வாழ்ந்த பெண்ணின் மனப்போராட்டங்கள், கஷ்டங்களை அழகாக எடுத்துக் கட்டியதால் இந்த படமும் ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகிவிட்டது. தியேட்டரில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இனி இது ஓடிடியில் வரும் போது அதைவிட அதிக பாராட்டு பெரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் சில படங்கள் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் ஓடிடிக்கு வந்த பிறகு அதிகமாக கலாய்க்கப்படும். அந்த வரிசையில் இந்த படம் இடம் பெறுமா? அல்லது இந்த படத்திற்கு ஃபேமிலி ‌‌‌‌ஆடியன்ஸ்‌ சப்போர்ட் அதிகரிக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+