100 ஜோடி செருப்பு இருந்தும், காலில் போடாத விஜய் ஆண்டனி! பின்னணியில் சோக சம்பவம்.. மனைவி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில வலிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இன்னும் சில வலிகளை ஒருவர் எப்படி தன்னோடு சுமந்து கொண்டிருக்கிறார் என்பதை கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அப்படி ஒரு உருக்கமான விஷயத்தை தான் நடிகர் விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா அப்பா குட்டி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார். சமீப காலமாக விஜய் ஆண்டனி பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு செருப்பு அணியாமல் வருவதை பலரும் கவனித்து இருப்பீர்கள். அதற்கு பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கிறது என்பது இப்போது பாத்திமா பேசிய வீடியோவை பார்த்த பிறகுதான் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.

விஜய் ஆண்டனி பாத்திமா தம்பதியின் மகள் மீரா கடந்த 2023 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த இழப்பிலிருந்து குடும்பத்தினர் இன்னும் மீண்டு வர முடியாமல் தவித்து வரும் நிலையில் மீராவின் நினைவுகளை விஜய் ஆண்டனி என்றும் தன்னுடன் வைத்திருப்பதை பாத்திமா மேடையில் சொல்லி இருக்கிறார். குறிப்பாக விஜய் ஆண்டனி செருப்பு அணியாதது, கையில் கட்டி இருக்கும் வாட்ச் என ஒவ்வொன்றுக்கும் பின்னல் மகளின் நினைவுகள் இருப்பதாக அவர் சொன்னது பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.

Vijay Antony Fatima Vijay Antony Meera Appa Kutty Tamil Cinema

விஜய் ஆண்டனி மனைவி பேச்சு

அதாவது நிகழ்ச்சியில் பாத்திமா பேசும் போது, விஜய் ஆண்டனி இப்போ ஏன் செருப்பு போடாமல் நடக்கிறார் என்று பலருக்கும் தெரியாது. அதற்கான காரணத்தை நான் உங்களிடம் சொல்ல போகிறேன். ஆனால் இதை சொல்ல வேண்டாம் என்று என்னுடைய கணவர் கீழே இருந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் நான் பல வருஷங்களுக்கு பிறகு இந்த மேடைக்கு வந்து இருக்கிறேன், உங்கள் எல்லோரையும் என்னுடைய குடும்பமாகத்தான் நினைக்கிறேன். அதனால்தான் இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

செருப்பு போடாத காரணம்

எங்களுடைய மகள் மீரா எங்களை விட்டு பிரிவதற்கு முன்பு அவளை காலேஜில் சேர்க்க வேண்டும் என்பதற்காக 50 முதல் 100 ஜோடி வரைக்கும் ஷூ, செருப்பு வாங்கி வைத்திருந்தோம். ஆனால் அவற்றையெல்லாம் அணியாமலேயே எங்களுடைய மகள் எங்களை விட்டு போய்விட்டாள். அதைப் பார்த்த பிறகு விஜய் ஆண்டனிக்கு செருப்பு போடவே மனசு வரல. அதனால்தான் இப்போது வரைக்கும் அவர் செருப்பு அணிவதில்லை. சில நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது வேறு வழியில்லாமல் தான் டிரஸ்ஸுக்கு மேட்ச்சாக போட்டுக் கொள்வார். ஆனால் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் அதை கழற்றி விடுவார் என்று பாத்திமா உருக்கமாக பேசி இருந்தார்.

பெற்றோரின் வலி

ஒரு குழந்தையை பெரியவளாக்கி கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒவ்வொன்றாக வாங்கி வைக்கும் பெற்றோருக்கு தான் அந்த பொருள்களை பார்க்கும்போது எவ்வளவு வலியாக இருக்கும் என்பது புரியும். மீராவுக்காக ஆசை ஆசையாக வாங்கிய செருப்புகள் அப்படியே இருக்க, அவற்றை அணிய வேண்டிய மகள் இல்லாமல் போனது விஜய் ஆண்டனியை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை பாத்திமா பேச்சிலேயே உணர முடிகிறது.

Vijay Antony Fatima Vijay Antony Meera Appa Kutty Tamil Cinema

விஜய் ஆண்டனியின் வாட்ச் ரகசியம்

இதை எடுத்து விஜய் ஆண்டனி கையில் எப்போதும் இருக்கும் வாட்ச் பற்றியும் பாத்திமா சொன்ன விஷயம் இன்னும் உருக்கமாக இருந்தது. அதில், "அவரிடம் நிறைய வாட்ச்கள் இருந்தன. ஆனால் இப்போது அவற்றையெல்லாம் அவர் அணியவில்லை. என்னுடைய மகள் கடைசியாக அணிந்திருந்த வாட்சைதான் எப்போதும் கட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வாட்சை நான் பார்த்து பார்த்து மீராவுக்காக வாங்கி கொடுத்தேன். அவளுக்கு அது ரொம்ப பிடிக்கும். அதன் விலை 3500 தான். ஆனால் இப்போது விஜய் ஆண்டனி அந்த வாட்சைதன் எப்போதும் அணிந்து கொண்டிருக்கிறார்" என்று கண் கலங்கியபடி தெரிவித்தார்.

இங்கே கவனிக்க வேண்டியது அந்த வாட்சின் விலை கிடையாது. பல விலை உயர்ந்த வாட்ச்களை வைத்திருந்தாலும் மகள் கடைசியாக அணிந்து இருந்த அந்த ஒரு வாட்ச் மட்டும் விஜய் ஆண்டனி தொடர்ந்து அணிவது. மீராவின் நினைவாக அவர் வைத்திருக்கும் அந்த சின்ன பொருள் அவருக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை பாத்திமாவின் வார்த்தைகள் நமக்கு சொல்கின்றது.

மேடையில் பேசும்போது கணவர் சொல்ல வேண்டாம் என்று தடுத்தும் ரசிகர்களை தன்னுடைய குடும்பமாக நினைத்து தான் இந்த விஷயங்களை பகிர்ந்துள்ளதாக பாத்திமா கூறியது, பலரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் விஜய் ஆண்டனி பாத்திமா இருவருக்கும் ஆறுதல் கூறுவதோடு மீராவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+