குஞ்சுகளை கண்ட்ரோலில் வைக்க தெரியாத தலைவன்! வெளங்குமா தமிழ்நாடு? விஜய்யை வெளுத்த ப்ளூசட்டை மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் சூடு பிடித்து கொண்டே இருக்கும் நிலையில், விஜய் பெயர் தற்போது சினிமாவை தாண்டி அரசியல் மற்றும் சமூக வலைதளங்களிலும் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. தேர்தல் பிரச்சாரம், மனைவி விவாகரத்து சர்ச்சை, ரசிகர்கள் பேசும் கருத்துகள், அதற்கு வரும் எதிர்வினைகள் - இவை எல்லாம் சேர்ந்து கடந்த சில நாட்களாக இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

Vijay Sangeetha Blue Sattai Maran

தஞ்சாவூரில் விஜய் பிரச்சாரம் - ரசிகர்கள் கூட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய், சமீப நாட்களாக பல மாவட்டங்களில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் நேற்று தஞ்சாவூரில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

அப்போது விஜயை ஒரு பார்வை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. பலர் தடுப்புகளை தாண்டி முன் வர முயன்ற காட்சிகளும் இணையத்தில் வைரலாகின.

"சினிமா ஹீரோவாக இருந்தவர் இப்போது அரசியலில் நேரடியாக மக்கள் நடுவில் நிற்கிறார்" என்பதால், அவரை நேரில் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டுவதாக அரசியல் வட்டாரங்களும் கூறுகின்றன.

மனைவி சங்கீதா விவாகரத்து சர்ச்சை

இதே நேரத்தில் இன்னொரு பக்கம் விஜயின் குடும்ப வாழ்க்கை பற்றிய தகவலும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. விஜயின் மனைவி சங்கீதா, விஜயுடன் இனி வாழ விருப்பமில்லை என்றும், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக சில தகவல்கள் வெளியாகின.

அதற்குக் காரணமாக, விஜய் மற்றொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. மேலும் அந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சங்கீதா கூறியதாகவும் தகவல்கள் பரவின. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்திலும் பேசுபொருளாக மாறியது.

ரசிகைகள் பேசும் கருத்துகள்

இந்த விவகாரத்தை விட அதிகமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்ட விஷயம் விஜய் ரசிகைகள் அளித்த சில பேட்டிகள் தான். ஒரு ரசிகை முன்பு பேசியபோது, "விஜய்க்கு நாங்க இருக்கோம்... ஆயிரம் அக்கா இருக்கோம்... ஆயிரம் தங்கச்சி இருக்கோம்... வேண்டுமானால் பொண்டாட்டியாக கூட இருப்போம்... உங்களுக்கு என்ன?" என்று பேசிய வைரலானது.

அதற்குப் பிறகு தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இன்னொரு இளம் பெண் கூறிய கருத்தும் பெரிய விவாதமாக மாறியது. அவர் பேசியது என்னவென்றால்:
"குப்பை பொறுக்குறவனே இரண்டு பொண்டாட்டி வைத்திருக்கான்... கூட்டுறவள் நாலு புருஷன் வைத்திருக்கா... பணக்காரன் 10 பொண்டாட்டி வச்சுக்குவான்... எங்ககிட்ட காசு இருக்கு நாங்க வைத்துக்கிறோம்... உங்களுக்கு என்ன?

இப்ப உங்களுக்கு தேவை அரசியல் தானே? ஓட்டு தானே? இந்த விஷயம் எங்களுக்கு எல்லாம் எப்போதோ தெரியும். சங்கீதாவுக்கு இப்போதான் தெரிந்திருக்கு போல. தேர்தல் வரும்போது தான் விவாகரத்து கேட்கிறார்" என்று பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதும், பலரும் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

நெட்டிசன்களின் ரியாக்ஷன்

இந்த பேச்சை கேட்ட பல இணைய பயனர்கள், "ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பற்றி இப்படி பேசுவது சரியா?" "திருமணத்தை மீறிய உறவு என்ற குற்றச்சாட்டை ஆதரிக்கும் மாதிரி பேசுவது தவறு"
"இது ரசிகர் பைத்தியம் தான்" என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

ப்ளூ சட்டை மாறன் கடும் விமர்சனம்

இந்த சர்ச்சைக்கு இடையே, சினிமா விமர்சகராக பிரபலமான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது பதிவில், "தலைவனின் சொல்லுக்கு கட்டுப்படாத குஞ்சுகள்... குஞ்சுகளை கண்ட்ரோலில் வைக்க தெரியாத தலைவன்... இந்த லட்சணத்தில் காசு தராமல் கூடும் கூட்டமென பெருமை பீத்தல் வேறு.

மேலும் மற்றொரு பதிவில், "தவெகவின் மகளிர் ஆர்மி பேச்சுகள் அனைத்தும் அட்டகாசம்... இது வேற லெவல்... வெளங்குமடா தமிழ்நாடு" என்றும் குறிப்பிட்டார். இந்த பதிவுகளும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகின.

அரசியல் + சினிமா = பெரிய விவாதம்

விஜய் சினிமா நடிகராக இருந்த காலத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு பெற்றவர். ஆனால் அரசியலில் இறங்கிய பிறகு அவரை பற்றிய விவாதங்கள் இன்னும் அதிகமாகி விட்டன. ஒரு பக்கம் ரசிகர்கள் அவரை ஆதரித்து பேசுகிறார்கள். மற்றொரு பக்கம் எதிர்ப்பாளர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இதற்கிடையில் ரசிகர்கள் பேசும் சில கருத்துகள் தான் இப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+