“வாழ்த்துக்கள் நண்பா… வரலாறு படைத்துவிட்டாய்!” சிவகார்த்திகேயன் முதல் தெலுங்கு நடிகர்கள் வரை! விஜய்க்கு பாராட்டு மழை
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் மிகுந்த பரபரப்பில் உள்ளது. இந்த சூழலில் விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியதும், சினிமா உலகமே கொண்டாட்ட மனநிலைக்கு மாறியுள்ளது.

நடிகர் விக்ரம் வாழ்த்து
இந்த வரலாற்று தருணத்தில், நடிகர் விக்ரம் "வாழ்த்துக்கள் நண்பா... வரலாறு படைத்துவிட்டாய்!" என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு நண்பனாகவும், சக நடிகராகவும் அவர் வெளிப்படுத்திய இந்த வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக விஜய்யின் டிரஸ் கோடில் விக்ரம் வந்தது அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. இப்போது தான் விஜய்க்கு தான் சப்போர்ட் என்று உறுதி செய்திருக்கிறார்.

விஷால் வாழ்த்து
அதேபோல், நடிகர் விஷால் தனது ட்விட்டர் பதிவில் "இன்று மிக முக்கியமான நாள். தேர்தல் முடிவுகள் பல திருப்பங்களுடன் நகர்கின்றன. இன்னும் சில மணி நேரங்களில் தமிழக ஆளுநரின் முழு செயல்பாடுகளையும் பார்க்க நேரிடும்" என்று குறிப்பிட்டு, ஆளுநரின் பெயரையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

நடிகர் நானி பதிவு
தெலுங்கு நடிகர் நானி தனது பதிவில், "முதலில் சந்தேகிக்கப்பட்டவர் பின்னர் வெற்றியாளராக மாறுவது - அது இப்போது தமிழகத்தில் நடக்கிறது" என்று குறிப்பிட்டு, விஜயின் பயணத்தை 'அண்டர்டாக் வெற்றி' என பாராட்டி இருக்கிறார். மக்கள் எடுத்த முடிவு நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற அவரது நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் மற்றும் சிவகார்த்திகேயன்
இதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் "இது மிகப்பெரிய வரலாற்று வெற்றி" என்று பாராட்டி தனது வாழ்த்தை தெரிவித்தார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், "முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வெற்றி பெறுவது சாதாரண விஷயம் இல்லை. திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. மக்கள் பணி சிறக்கட்டும்" என்று தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விஜய தேவாரகொண்டா வாழ்த்து
அதேபோல், தெலுங்கு முன்னணி நடிகர் விஜய தேவாரகொண்டா வெளியிட்ட பதிவு மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. "தமிழக மக்கள் உறுதியாக வாக்களித்து தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். புதிய முதல்வருக்கும், தமிழக மக்களுக்கும் வளர்ச்சியும் வளமும் கிடைக்கட்டும்" என்று கூறிய அவர், தமிழக அரசியலில் புதிய கட்டத்தை எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ஜீவா இயக்குனர் வெங்கட் பிரபு பாடகர் மனோ, பாடகர் கிரிஷ் மற்றும் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பல மொழித் திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் கூட விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பது, அவரது அரசியல் வெற்றியின் தாக்கம் மாநில எல்லைகளை தாண்டி சென்றுவிட்டது என்பதற்கே சாட்சி. ஒரு பக்கம் தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு நிமிடமும் திருப்பம் எடுத்து வரும் நிலையில், மறுபக்கம் திரையுலக பிரபலங்களின் ஆதரவு மற்றும் பாராட்டுகள் இந்த அரசியல் சூழ்நிலையை இன்னும் அதிக பரபரப்பாக மாற்றியுள்ளது.
மொத்தத்தில், சினிமாவில் உருவான 'மக்கள் ஆதரவு' இன்று அரசியலிலும் வலுவாக வெளிப்படுகிறது. முதல் தேர்தலிலேயே இத்தகைய முன்னிலை என்பது சாதாரண விஷயம் அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கூறும் நிலையில், விஜயின் இந்த பயணம் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்பது தெளிவாகிறது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications