விஜய் சர்ச்சில் முட்டி போட்டு நடந்த பின்னணி இதுதான்! 30 வருஷமா தொடரும் செயல்.. ஓபனாக உடைத்த நடிகர் ஸ்ரீமன்
சென்னை: நடிகர் விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த வீடியோ வைரலானதையடுத்து தொடர்ந்து சோசியல் மீடியாவில் நேற்றில் இருந்து அவரை பலரும் கலாய்த்து வருகின்றனர். இதற்கிடையில், அவருக்கு நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இந்த விவகாரம் தற்போது அரசியல் சூழலுடன் சேர்ந்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரலான வீடியோ
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு விஜய் தேவாலயத்திற்கு சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்த காட்சிகள் வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள், "எங்களுக்காக இவ்வளவு மனதார வேண்டுகிறீர்களா?" என்று உணர்ச்சிபூர்வமாக பதிவுகள் எழுதியனர்.
ஆனால் அதே நேரத்தில், சிலர் இதை விமர்சித்து, "இது தேர்தல் நேர ஸ்டண்ட் தானே?" என்று கேள்வி எழுப்பினர். மீம்ஸ்களும் கிண்டல்களும் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.
ஸ்ரீமன் சொன்னது
இந்த விமர்சனங்களுக்கு, ஸ்ரீமன் தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்தார். "எனக்கு விஜய்யை 30 வருடமாக தெரியும். ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் முன்பும் அவர் கடவுளிடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது வழக்கம். இது புதிய விஷயம் கிடையாது. தேர்தலுக்காக செய்வது இல்லை," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், "நான் திருவண்ணாமலை போய்விட்டு பிரசாதம் கொண்டு வந்தாலும், அவர் மரியாதையாக ஏற்றுக்கொள்வார். விபூதி வைத்துக் கொள்வார். அவர் எல்லா மதத்தையும் மதிப்பவர். அதிலும் குறை கூறுவது தேவையா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சாமி கும்பிடுறதிலுமா பிரச்சனை
மேலும் அவர் கூறியதில், "எதில் வேண்டுமானாலும் விமர்சியுங்கள். ஆனா சாமி கும்பிடுற விஷயத்திலேயே அவதூறு பரப்புவது சரியா?" என்ற கேள்வியும் எழுப்பினார். நடிகர் ஸ்ரீமன் ஆரம்பத்திலிருந்து விஜய்க்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். விஜய் உடைய நண்பராக அவருக்கு சப்போர்ட் செய்து பேசி வருவதை விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
பழைய விஷயங்களும் மீண்டும் பேசு
இதற்கிடையில், விஜய் கோவில், தேவாலயம், மசூதி போன்ற இடங்களுக்கு செல்வதை வைத்து சிலர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். மேலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை... குறிப்பாக மனைவி சங்கீதாவுடன் இருக்கும் விவாகரத்து வழக்கு மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்படத் தொடங்கியுள்ளது.
ஒரு சாதாரண பிரார்த்தனை வீடியோ எப்படி பெரிய விவாதமாக மாறுகிறது என்பதற்கே இந்த சம்பவம் உதாரணமாகி உள்ளது. ஒரு பக்கம் ரசிகர்கள் ஆதரவு... மற்றொரு பக்கம் விமர்சனங்கள்... இதற்கிடையில், "விஜய் இப்படித்தான்" என்று பழக்கத்தை விளக்கும் ஸ்ரீமனின் கருத்து இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications