Rashmika : எதிர்பார்த்த அந்த நாளும் இதுதானா? விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி வெளியானது
சென்னை: தென்னிந்திய திரையுலகின் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஜோடியான நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகக் காதல் கிசுகிசுக்களில் சிக்கியிருந்த இந்த ஜோடி, இறுதியாகத் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பது உறுதிபோல தெரிகிறது.

டீப் லவ் ஜோடியின் திருமணத் தேதி
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா ஜோடி, 2026 பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.
முந்தைய செய்தி
கடந்த அக்டோபர் மாதத்திலேயே இவர்களுக்கு நிச்சயதார்த்தம் ஆனதாக கூறப்பட்ட நிலையில், இப்போது திருமணத் தேதி குறித்த செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா காதல்
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் தெலுங்கு திரையுலகில் இணைந்து நடித்த படங்கள் மூலம் ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் ஜோடியாக மாறினர். இவர்கள் இணைந்து நடித்தப் படங்களில் 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' ஆகியவை மிகவும் பிரபலம். இந்த படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி தான், நிஜத்திலும் இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற வதந்திக்கு முக்கியக் காரணம் ஆனது. சினிமாவாக இருந்தாலும் சரி சீரியல் ஆக இருந்தாலும் சரி அதில் இருவர் இணைந்து நடிக்கும் போது அவர்களுடைய கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடும் போது நிஜத்திலும் சில நடிகர்களுக்குள் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆக தொடங்கி விடுகிறது
விஜய் தேவரகொண்டா பயோகிராஃபி
விஜய் தேவரகொண்டா தெலுங்கில் அறிமுகமாகி, தற்போது பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ளார். இவரது 'பெல்லி சூப்புலு' மற்றும் 'அர்ஜுன் ரெட்டி' ஆகிய படங்கள் மூலம் தான் இவர் இந்தியா முழுவதும் பிரபலமானார். ஆரம்ப காலத்தில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் துணிச்சலானக் கதைக்களம், இவருக்கு சர்ச்சைகளையும், அதே சமயம் புகழையும் கொடுத்தது. இவரின் வெளிப்படையான பேச்சுக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பும்.

ராஷ்மிகா மந்தனா: நேஷனல் க்ரஷ்
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் அறிமுகமாகி, தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். 'கீதா கோவிந்தம்' இவருக்குத் தெலுங்கில் பெரிய புகழை கொடுத்தது. 'புஷ்பா' படத்தில் அவர் நடித்த 'ஸ்ரீவள்ளி' பாத்திரம் இவரை 'நேஷனல் க்ரஷ்' ஆக்கியது. ஆரம்ப காலத்தில் இவருக்கும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் அந்த திருமணம் தடைபட்டது. அதன் பிறகுதான் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் பெயரும் இணைந்துக் கிசுகிசுக்கப்பட்டது.
பல ஆண்டுகளாகத் தங்கள் உறவு குறித்து பொதுவெளியில் நேரடியாக பேசாமல் இருந்த இந்த ஜோடி, தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இவர்களது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த திருமண செய்தி உண்மையா, அல்லது வதந்தியா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications