திரிஷாவுடன் வருகை! இதுவரைக்கும் விஜய்க்கு சப்போர்ட் செய்த நடிகை.. இப்போ சங்கீதாவிற்காக ஆதங்க பதிவு!
சென்னை: நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் Vijay குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது. காரணம், அவரது மனைவி சங்கீதா Sangeetha Sornalingam தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனு. அந்த மனுவில் கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகள் வெளியேறியதும், இந்த விஷயம் கோலிவுட்டில் மட்டுமல்ல அரசியல் வட்டாரங்களிலும் பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது. இந்த நிலையில் நேற்று விஜய் நடிக்கும் திரிஷாவுடன் ஜோடியாக கல்யாண பங்க்ஷனில் கலந்து கொண்டார் இது குறித்து இதுவரைக்கும் விஜய்க்கு சப்போர்ட் செய்த நடிகை சனம் ஷெட்டி ஆதங்கத்துடன் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

சங்கீதாவின் விவாகரத்து மனு
சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த மனுவில், விஜய் தன்னிடம் இருந்து பல ஆண்டுகளாக உணர்ச்சிப்பூர்வமாக விலகி வாழ்ந்து வருகிறார் என்றும், ஒரு நடிகையுடன் அவருக்கு நெருக்கமான உறவு இருப்பதாகவும் கூறியதாக தகவல்கள் வெளிவந்தன.
மேலும் அந்த உறவை பற்றி கேள்வி எழுப்பியபோது அதை நிறுத்துவேன் என்று சொல்லிவிட்டு பின்னரும் தொடர்ந்ததாகவும், தனக்கு சுதந்திரமாக இயங்க விடாமல் கட்டுப்படுத்தியதாகவும், பொருளாதார ரீதியாகவும் சிரமம் ஏற்படுத்தியதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மனு தொடர்பான விசாரணை வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் அந்த நடிகை?
இந்த மனுவில் குறிப்பிடப்பட்ட "நடிகை" யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்படுகிறது. பலரும் பல பெயர்களை கூறி வருகிறார்கள். அதில் அதிகமாக பேசப்படும் பெயர் நடிகை திரிஷா Trisha Krishnan என்பதே. ஆனால் இந்த விவகாரம் குறித்து திரிஷா இதுவரை எந்தவிதமான விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருப்பதும் கவனிக்கப்படுகிறது.
திருமண விழாவில் விஜய் - திரிஷா வருகை
இந்நிலையில், சென்னையில் பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி (Kalpathi Aghoram) குடும்பத்தில் நடைபெற்ற திருமண விழா இந்த சர்ச்சையை இன்னும் பெரிதாக்கியது. அவருடைய மகன் திருமண நிகழ்ச்சியில் கோலிவுட்டின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அந்த விழாவுக்கு விஜய்யும், திரிஷாவும் ஒரே நேரத்தில் வந்து கலந்துகொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர்கள் ஒரே காரில் வரவில்லை என்றாலும், விழாவில் இருவரும் ஒன்றாகவே இருந்ததாகவும், இருவரும் அணிந்திருந்த உடைகளும் ஒரே கலர் டோனில் இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இந்த காட்சிகள் வெளியானதும் ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகள் உருவாகின. குறிப்பாக விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள சூழலில், இப்படியான நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா ஒன்றாக தோன்றியது தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கியதாக பலர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.
ரசிகர்களிடையே அதிருப்தி
இதுவரை எந்த சர்ச்சை வந்தாலும் விஜய்க்கு ஆதரவாக நின்ற பல ரசிகர்களும், ஆதரவாளர்களும் கூட இந்த சம்பவத்தால் குழப்பமடைந்துள்ளனர். "இப்படிப்பட்ட நேரத்தில் இது தேவையா?" என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
சிலர் சமூக வலைதளங்களில் திறந்தவெளியாகவே தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் அரசியல் ரீதியாகவும் இது எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டது என்று கூறுகிறார்கள். குடும்ப பிரச்சனை இன்னும் நீதிமன்றத்தில் இருக்கும் நேரத்தில் இப்படியான தோற்றம் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் கருத்துகள் பரவி வருகின்றன.
சனம் ஷெட்டி வருத்த பதிவு
இந்த விவகாரம் குறித்து நடிகை சனம் ஷெட்டி Sanam Shetty கூட வெளிப்படையாக தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பதிவில், "இது சரியான வழி இல்லை. மனைவியின் துயரத்தை இப்படி புறக்கணிக்க முடியாது. நீண்ட காலமாக ரசிகையாக இருக்கும் ஒருவராக இந்த நேரத்தில் இதைப் பார்ப்பது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சனம் ஷெட்டி இதற்கு முன்பு விஜய்க்கு எதிராக எந்த விமர்சனமும் வந்தாலும் அவரை ஆதரித்து பதிவுகள் செய்து வந்தவர் என்பதால், அவருடைய இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்தது.
சர்ச்சை இன்னும் அதிகரிக்கும் நிலை
இதுவரை விஜய்க்கு முழுமையாக ஆதரவாக இருந்த சிலர் கூட தற்போது கேள்விகள் எழுப்ப தொடங்கியிருப்பது இந்த விவகாரத்தை மேலும் பேசப்படும் விஷயமாக மாற்றியுள்ளது. விவாகரத்து மனு விசாரணை ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அதுவரை இந்த சர்ச்சை சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் தொடர்ந்து பேசப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
NO!
— Sanam Shetty (@ungalsanam) March 5, 2026
This is not the way ❌
Grief of the wife cannot be ignored like this!
As a long time fan its deeply disappointing to watch at this time! @actorvijay @TVKVijayHQ https://t.co/Q9ugqzxlwM
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க












Click it and Unblock the Notifications