விஜய் இப்போ தமிழகத்தில் முதல்வர் ஆகிட்டாரு.. ஆனால், கொழும்புவில் நடிகை பூஜா ஹெக்டே பேச்சு
சென்னை: இலங்கையில் நடந்த கடை திறப்பு விழாவில் நடிகை பூஜா ஹெக்டே ஆடிய ஆட்டம் ஒரு பக்கம் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது என்றால், விஜய் குறித்து அவர் பேசிய விஷயங்கள் இன்னொரு பக்கம் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக விஜய்யுடன் 2 படங்களில் நடித்திருக்கிறேன், அவர் இப்போது தமிழக முதல்வராக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் பெருமையாக பேசி இருக்கிறார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

விஜய் பற்றி பெருமிதம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பூஜா ஹெக்டே தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது இலங்கை கொழும்புவில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பூஜாவை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலரும் திரண்டு இருக்கின்றனர். அப்போது மேடையில் அவர் பீட்ஸ் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்.
பூஜா ஹெக்டே டான்ஸ்
விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த அந்த பாடல் வெளியாகி பல வருடங்கள் ஆனாலும் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு குறையவில்லை. அந்த பாடலுக்கு பூஜா மீண்டும் டான்ஸ் ஆடியதை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி இருந்தனர். டான்ஸ் ஆடியதை தொடர்ந்து விஜய் குறித்து பெருமையாக பேசிய பூஜா, நான் விஜய் சார் உடன் 2 அற்புதமான படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தனது சந்தோஷத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். பூஜா விஜய் பற்றி பேச பேச அங்கிருந்த ரசிகர்களும் ஆரவாரம் செய்து இருக்கிறார்கள்.

பூஜா ஹெக்டே விஜய் நடித்த படம்
பூஜா ஹெக்டே விஜய்யுடன் முதல் முதலில் இணைந்து நடித்த படம் பீட்ஸ் தான். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பூஜா ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். படத்தின் கதையை தாண்டி அனிருத் இசையில் வெளியான அரபிக்குத்து பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த பாட்டுக்கு பூஜா விஜய் இருவரும் இணைந்து ஆடிய பாடலின் ஹூக் ஸ்டெப் இன்றைக்கும் பலராலும் ரசிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்த படம் ஜனநாயன். H. வினோத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா கயல் என்ற கேரக்டரிலும், விஜய் வெற்றி என்ற கேரக்டரில் நடித்திருந்தனர்.
விஜய்யின் கடைசி படம் என்று எதிர்பார்ப்பில் அந்த படம் பெரிதாக பேசப்பட்டது. அந்த படத்தில் பூஜா விஜய் உடன் மீண்டும் இணைந்து நடித்திருந்தார். அதைப்பற்றி இப்போது அவர் பெருமையாக பேசி இருப்பதும் அரபிக் குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பதும் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications
