விஜய் வெற்றியை வைத்து ரஜினியை வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. சிவகார்த்திகேயன், சீமானையும் விடலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி, நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. முதல் முறையாக தேர்தலை சந்தித்த கட்சி இத்தகைய வெற்றியைப் பெற்றிருப்பது தமிழக அரசியலில் பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Vijay TVK Tamil Nadu Elections 2026 Blue Sattai Maran Rajinikanth

ப்ளூ சட்டை மாறன் பதிவு

இந்த வெற்றியைத் தொடர்ந்து அரசியல் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் கடும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டு வரும் தொடர் பதிவுகள் வைரலாகி வருகின்றன. முதலில் அவர் வெளியிட்ட பதிவில் "பெரியார் மண்ணில் புதைக்கப்பட்ட கடப்பாரை" என்று குறிப்பிட்டு, சீமானை தமிழக அரசியல் மாற்றத்தை நையாண்டி கலந்த முறையில் விமர்சித்துள்ளார். அதனுடன் இணைக்கப்பட்டிருந்த படங்களில், இந்த தேர்தல் முடிவுகள் சிலருக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் பற்றிய பதிவு

அடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து அவர் வெளியிட்ட பதிவு அதிக கவனம் பெற்றது. "எங்கடா காணோம் என்று பார்த்தோம்... இதோ வந்துட்டாரு. விஜய் தேர்தலில் போட்டியிடும்போது 'திரைக்கதை' சார்ந்த விஜய் சார் ஜெயிக்க வேண்டும் என வாழ்த்தாமல், இப்போது ஜெயித்த பிறகு சொம்படிக்கும் தீரர் தளபதி" என்று குறிப்பிட்டு, தேர்தல் முன்பும் பின்னரும் பிரபலங்களின் நிலைப்பாடு மாறுவதை கடுமையாக நையாண்டி செய்துள்ளார்.

ரஜினி பற்றி கலாய்ப்பு

மேலும், "தலீவர்" என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவு ரஜினிகாந்தை குறிவைத்ததாக பார்க்கப்படுகிறது. அதில், "செய்தியாளர்கள் தலைவரே ஜெய்லர் 2 படம் எப்போ ரிலீஸ் என்று கேட்டால் விரைவில் என்று பதில் வரும் ஆனால், விஜய் வெற்றி பெற்றதை பற்றி... 'No comments'"
என்று குறிப்பிட்டு, அமைதியாக இருப்பதாக கலாய்த்து இருக்கிறார்

அதேபோல், குறித்தும் மறைமுகமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார். "உன்னவிட 25 வருஷம் சின்னப்பய... அரசியலுக்கு வந்த ரெண்டே வருஷத்தில் 100 தொகுதிக்கு மேல ஜெயிச்சிட்டான். 25 வருஷமா அரசியலுக்கு வரப்போறேன் வரப்போறேன்னு சொல்லி... எங்களை ஏமாத்திட்டு ஓடுன நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனா?" என்ற வரிகளில் ரஜினிகாந்தை ரசிகர்கள் கேள்வி கேட்பது போல ஒரு போஸ்ட் போட்டு கலாய்த்து இருக்கிறார்.

விஜய்யின் வெற்றி

இந்த தொடர் பதிவுகள் அனைத்தும் கலாய்ப்பு மற்றும் அரசியல் விமர்சனத்தின் கலவையாக இருப்பதால், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒருபுறம், "சரியாக பேசுகிறார்" என்று ஆதரிக்கும் நெட்டிசன்களும் உள்ளனர். மறுபுறம், "தனிப்பட்ட தாக்குதல் தேவையில்லை" என்று எதிர்ப்பும் எழுந்துள்ளது.

மொத்தத்தில், 108 தொகுதிகளில் விஜய் பெற்றுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, அரசியல் மட்டுமின்றி சினிமா பிரபலங்களிடையேயும், சமூக வலைதளங்களிலும் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகும் கருத்து மோதல்கள், நையாண்டிகள், ஆதரவு-எதிர்ப்பு குரல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+