நிறைய ஆகஷன்... வயிறு வெடிக்க வைக்கும் காமெடி... தளபதி செம ஹேப்பி மச்சி...!
சென்னை: விஜய் 64 கதை இவ்ளோ பிடிச்சு போகும்னு நம்ம தளபதி நினைச்சு கூட பார்க்கலையாம். அதனால செம ஹேப்பில இருக்காராம்.
இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்படி ஒரு கதையை விஜய் 64 காக சொன்னாராம். கதை முழுக்க செம காமெடி,செம ஆக்ஷன்..அது மட்டுமா நெஞ்சை தொடர சென்டிமென்ட்ஸாம்.

கதை கேட்டதிலிருந்து விஜய் ரொம்ப ஹேப்பியா இருக்காராம்.அதுக்கேத்த மாதிரி படத்தை சீக்கிரம் முடிச்சு குடுத்துடறேன்னும் லோகேஷ் கனகராஜ் வாக்கு குடுத்து இருக்கார்னு சொல்றாங்க.
லோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப்டை படிச்சவங்க நூறு நாளில் முடிச்சு குடுத்துருவேன்னு சொல்லி இருக்கார்.ஆனா, பாருங்க படத்தை 70 நாளில் முடிச்சு குடுத்துருவார்னு விஜய்கிட்ட சொன்னாங்களாம்.
இதிலும் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய்... ஐம் வெயிட்டிங்னு சொல்லி இயக்குநரை அசர வைத்து, அவரின் இன்ப அதிர்ச்சியை ரசித்து பார்த்து சிரிச்சு இருக்கார்னு விஜய் வட்டார தகவல் சொல்லுது.
விஜய் தவிர யார் யார் நடிப்பதுன்னு அட்லி படத்தை முடிச்சுட்டு முடிவு பண்ணலாம்னு இருக்கறதா சொல்றாங்க.ஆனா, யார் யார் எந்த கேரக்டரில் நடிப்பதுன்னு இயக்குநர் ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி வச்சிருக்கார்னும் பேச்சு அடிபடுது.












Click it and Unblock the Notifications