எளிமையான முறையில் காதலியை கரம்பிடித்த விஜய் டிவி புகழ்... வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவி புகழ் தற்போது எளிமையான முறையில் திருமணத்தை முடித்து இருக்கிறார்.
பல வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்த அவருடைய காதலியான பென்சி என்பவரை திடீர் திருமணம் செய்து இருக்கிறார்.
திருமணத்தைப் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று ரசிகர்கள் பலர் செல்லமாக கோபப்பட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரைட் ஹீரோவாக புகழ் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் புகழுடைய ரசிகர்கள் போட்டோக்கள் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் பார்த்ததும் ரசிகர்களுக்கு முதலில் அதிர்ச்சியாகவும், பின்பு மகிழ்ச்சியாகவும் இருந்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த காமெடி
விஜய் டிவியில் அறிமுகமான பலர் புகழின் உச்சியில் வலம் வந்து கொண்டிருப்பது போலத்தான் தற்போது புகழ் வலம் வந்து கொண்டிருக்கிறார். அடித்தட்டு மட்டத்தில் இருந்து நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக எவ்வளவோ சோதனைகளை கடந்த புகழ், தற்போது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற ஒரு சிலர் மட்டும்தான் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது புகழும் இணைந்துள்ளார். புகழுடைய காமெடியை பார்த்து பலர் தங்களுடைய சோகங்களை மறந்து மகிழ்ச்சியை கொண்டு வருவதாக கூறி வருகிறார்கள்.

இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
புகழ் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நேரத்திலேயே காதலித்து வந்த பென்ஸி ரியா என்பவரை தற்போது புகழ் திருமணம் செய்துள்ளார். புகழுடைய திருமணம் எப்போது என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு புகழ் திருமணம் சந்தோஷத்தை கொடுத்து இருந்தாலும் யாருக்கும் சொல்லாமல் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இப்படி செய்து விட்டாரே என்று சிலர் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம். ஆனாலும் புகழுடைய திருமண போட்டோக்கள் தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சசிகுமார் கலந்து கொண்டு வாழ்த்து
புகழுடைய திருமணம் விழுப்புரம் மாவட்டம் தீவனூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் உறவினர்களின் ஆசிர்வாதங்களோடு நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு நடிகரும் திரைப்பட இயக்குனருமான சசிகுமார் நேரில் சென்று கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளார். கிராமத்தில் எளிமையாக நடைபெற்ற புகழுடைய திருமணம் அவருடைய ரசிகர்களுக்கு தெரிந்ததும் அங்கு அதிக அளவில் குவிய தொடங்கி விட்டனர்.

வியப்பை கொடுத்த திருமணம்
எளிமையான முறையில் புகழுடைய திருமணம் நடைபெற்றாலும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் தற்போது சமூக வலைத்தளங்களில் புகழ் மற்றும் அவருடைய காதல் மனைவியின் புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு ஆசீர்வாதங்கள் மழை போல குவிந்து வருகிறது. இதுவரைக்கும் வெளியான புகைப்படங்களில் பிரபலங்கள் அதிகமாக காணவில்லை என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் புகழுடைய திருமணம் அவருடைய உறவினர்களுடன் எளிமையாக கொண்டாடப்பட்டது பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications