விஜயால் திமுகவிற்கு இந்த நிலைமை வரும்னு கருணாநிதியே நினைச்சு பார்த்திருக்க மாட்டாரு! சீண்டிய இயக்குனர்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள் மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க மிக அருகில் வந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

2026 தேர்தல்
இந்த தேர்தலில் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி 73 இடங்களை கைப்பற்றிய நிலையில், அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முழு பெரும்பான்மைக்கு இன்னும் சில எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டாலும், அது விரைவில் கிடைக்கும் என்ற அரசியல் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த தருணத்திலிருந்தே பரபரப்பு நிலவியது. வழக்கமாக தபால் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், இந்த முறை தவெக ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. பின்னர் மின்னணு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியபோது, ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தாலும், சில மணி நேரங்களிலேயே நிலைமைகள் முழுமையாக மாறின. மூன்றாவது இடத்தில் இருந்த தவெக திடீரென வேகமாக முன்னேறி முதல் இடத்தை பிடித்து, தொடர்ந்து முன்னிலை தக்கவைத்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
விஜய்க்கு கிடைத்த வெற்றி
விஜய்யின் அரசியல் அணுகுமுறையும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் அவர் திமுகவுடன் இணைந்து செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதற்கு மாறாக, அவர் திமுகவை நேரடியாக விமர்சித்து, "இந்த தேர்தல் திமுகக்கும் தவெகவுக்கும் இடையேயான நேரடி போட்டி" என்று வெளிப்படையாக அறிவித்தார். இந்த நிலைப்பாடு தேர்தல் களத்தை முழுமையாக மாற்றியது.
தொண்டர்கள் விவாதம்
இந்த வெற்றிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கடும் விவாதம் உருவாகியுள்ளது. விஜய் ஆதரவாளர்கள் "இனி திமுக அரசியல் முடிவுக்கு வருகிறது" என்று கூறி வருகின்றனர். அதற்கு பதிலாக திமுக ஆதரவாளர்கள் "இந்த கட்சி பல தடவை தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ளது; இதுவும் ஒரு கட்டம் மட்டுமே" என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இயக்குனர் பதிவு
இதற்கிடையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா பகிர்ந்த பழைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சிறுவயதில் இருந்த விஜய், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அருகில் நிற்கிறார். அந்தப் புகைப்படத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா, "பின்னால் நிற்கும் அந்த சிறுவன் ஒருநாள் திமுகவை சவால் செய்யும் அளவிற்கு வளருவார் என்று கருணாநிதி நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் இந்த அரசியல் வெற்றி குறித்து திரையுலகமும், அரசியல் வட்டாரங்களும் பல்வேறு கோணங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன. சிலர் இதை மக்கள் மாற்றத்தை விரும்பியதற்கான வெளிப்பாடு என்றும், இளைஞர்களின் அரசியல் எழுச்சியின் சின்னமாகவும் பாராட்டுகின்றனர். அதே நேரத்தில் சிலர், "தேர்தலில் வெற்றி பெறுவது ஒரு நிலை மட்டுமே; ஆனால் ஆட்சியை நிலைநிறுத்துவது பெரிய சவால்" என்று எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில், இந்த தேர்தல் முடிவு தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக, எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து, ஆட்சியை அமைக்கத் தயாராகி வருகிறது. இனி இந்த வெற்றியை நீண்டகால அரசியல் நிலைத்தன்மையாக மாற்றுவாரா என்பது தான் அரசியல் வட்டாரங்களில் எழும் முக்கியமான கேள்வியாக உள்ளது.
-
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications