மதுரை மாநாடை தொடர்ந்து, 'ஜனநாயகம்’ ஆடியோ ரிலீஸிலும் அதிரடி! ரஜினி, கமல், அஜித்துக்கு அழைப்பு? விஜயின் பிளான்!
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, ஒட்டுமொத்த கோலிவுட்டையும் வியக்க வைத்த ஒரு சம்பவம். சமீபத்தில் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்தி, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் "சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளிய வரும், வேடிக்கை பார்க்க வராது" என்று அவர் பேசிய வசனங்கள் இன்றும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மாநாட்டின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' ஆடியோ ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி, சினிமா வட்டாரங்களில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

ஜனநாயகன் ஒரு பிரம்மாண்ட அரசியல் என்ட்ரி
ஹெச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'ஜனநாயகன்', விஜய்யின் சினிமா வாழ்க்கையின் கடைசிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு விஜய்யின் சம்பளம் மட்டுமே ₹275 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் வெளியான 'பகவந் கேசரி' படத்தின் ரீமேக்காக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் போஸ்டர் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் இருப்பதால், இது ஒரு அரசியல் படமாக இருக்கும் என்றே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரபல நடிகர்கள்
இந்தப் படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் அரசியலில் அடி எடுத்து வைத்த பிறகு அரசியல் சம்பந்தமாக எடுக்கப்பட்ட எந்த திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது
ஆடியோ ரிலீஸ்
தயாரிப்பு நிர்வாகம் ஒரு மிக முக்கியமான திட்டத்தை செயல்படுத்த உள்ளதாம். வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் மலேசியாவில் 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ ரிலீஸை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். விஜய்யின் கடைசிப் படமாக இருப்பதால், 20க்கும் அதிகமான முன்னணி நடிகர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஜினி, கமல், அஜித்:
இந்த பட்டியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பலரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. ரஜினி மற்றும் கமல் இருவரும் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும், விஜய்யின் ஆரம்பகால நண்பரான சூர்யா நிச்சயம் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயும் அஜித்தும் தற்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால், அவர் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. தனுஷ், சிம்பு ஆகியோர் கண்டிப்பாக வருவார்கள் என்று சினிமா வட்டாரங்கள் நம்புகின்றன.
சினிமா உலகைக் கலக்கும் ஒரு நிகழ்வு
இப்படி ஒரு நட்சத்திர விழா நடந்தால், அது கண்டிப்பாக இந்திய சினிமாவின் வரலாற்றில் ஒரு பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படும். விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவாக, சினிமா பிரபலங்கள் ஒன்று கூடுவது பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி, 'ஜனநாயகன்' படத்திற்கு மேலும் பெரிய எதிர்பார்ப்பையும், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியையும் கொடுக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications