KPY Bala: "உனக்குனு கொஞ்சம் காசு வச்சிக்கோடா!" கேபிஒய் பாலாவுக்கு விஜய் சேதுபதி அட்வைஸ்
சென்னை: நடிகர் கேபிஒய் பாலா, நடித்துள்ள "காந்தி கண்ணாடி" என்ற படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "உனக்கென கொஞ்சம் காசு வச்சிக்கோடா" என பாலாவுக்கு அறிவுரை வழங்கினார்.
"காந்தி கண்ணாடி" என்ற படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படக்குழுவினரின் ப்ரோமோஷன் விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

அவர் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நான் பாலாகிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன். நிறைய பேருக்கு தானம் தர்மம் பண்றவன் கைல எப்பவும் காசு இருக்கணும். எல்லாத்தையும் குடுத்தாலும் உனக்குன்னு கொஞ்சம் வச்சிக்கடான்னு சொல்லுவேன்.
நிறைய பேருக்கு உதவி பண்றவங்க கீழே விழுந்தா, உதவி பண்ணனும்னு நினைக்கிறவங்களுக்கு பயம் வந்துடும். அந்த பயத்தை ஏற்படாம பார்த்துக்க" என்றார் விஜய் சேதுபதி. இந்த கருத்தை பலரும் ஆமோதித்தனர்.
கேபிஒய் பாலா அடிமட்டத்தில் இருந்து பல்வேறு அவமானங்களை சந்தித்து முன்னுக்கு வந்தவர். விஜய் டிவியில் போட்டியாளராக வந்த பாலா, தற்போது சில நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இருந்து நடத்தி வருகிறார்.
பாலாவிடம் டைமிங்கில் காமெடி செய்வது அனைவருக்கும் பிடித்தமானது. இவர் பல்வேறு நிறுவனங்களில் கொண்டாடப்படும் விழாக்களிலும் performance செய்கிறார். அதன் மூலமும் இவருக்கு பணம் கிடைக்கிறது.
பாலா இதுவரை 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். அதற்கான பராமரிப்பு செலவையும் அவரே பார்த்துக் கொள்கிறார். 10 ஆம்புலன்ஸ்களை வாங்கிய பிறகுதான் அவர் கார் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.
கேபிஒய் பாலா நிறைய பேருக்கு தொழில் தொடங்க உதவி செய்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களால் முடிந்த தொழிலை நவீனமயப்படுத்திக் கொடுத்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் வீடு கட்டுவதற்காக இடம் வாங்கி போட்டார்.
அந்த இடத்தில் வீடு கட்டுவார் என்று பார்த்தால் அவர் மருத்துவமனை கட்டி வருகிறார். இங்கு ஒரு பைசா செலவில்லாமல் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கேபிஒய் பாலாவுக்கு அமுதவாணனும் கை கொடுத்து உதவியுள்ளார்.
வரும் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் "மதராஸி" படம் வெளியாகிறது. இதுகுறித்து பாலாவிடம் கேட்ட போது "அண்ணன் படம் எப்போதுமே டாப்தான். அவர் படத்திற்கு யாருக்காவது டிக்கெட் கிடைக்காவிட்டால் "காந்தி கண்ணாடி" படத்திற்கு வருவார்கள் என்பதால் அன்றைய தேதியில் ரிலீஸ் செய்துள்ளோம்" என்றார்.
பாலாவின் சேவையைப் பாராட்டிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், "உங்கள் கையை மீறிப் போகும் செலவுகளுக்கு என்னிடம் தயங்காமல் உதவி கேளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார். லாரன்ஸ் மாஸ்டரின் அறக்கட்டளையிலும் பாலா தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications