மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி.. மேடையிலே சூர்யாவிடம் சொன்ன கண்டிஷன்
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்த "பீனிக்ஸ்- விழான்" திரைப்படம் நாளை ஜூலை நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷனில் பேசிக்கொண்டிருந்த விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் உங்கள் மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல் வந்ததாக சிலர் சொல்கிறார்கள் என்று சொன்னதற்கு விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா தன்னுடைய தந்தையோடு சேர்ந்து ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பிறகு இப்போது பீனிக்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் பிரமோஷனில் சூர்யா பேசிய வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த புகாருக்கு விஜய் சேதுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ப்ரோமோஷன் பேட்டி
அதாவது சூர்யா முதல் படத்தின் பிரமோஷனில் பேசும்போது என்னுடைய அப்பா வேறு நான் வேறு என்று பேசியது விமர்சனங்களை சந்தித்தது. அதனால் சமீபத்தில் சூர்யா மனம் உடைந்து போய் தான் பேசியது தவறு என்று வருத்தம் தெரிவித்து இருந்தார். அதுபோல தன்னுடைய தந்தை தனக்கு ஒரு நாளைக்கு செலவுக்கு 500 ரூபாய் பாக்கெட் மணி தான் தருவார் என்று சூர்யா சொன்னதாக சில செய்திகள் பரவி வந்தது, அதை தான் சொல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவித்து இருந்தார்.
மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி
கடந்த சில நாட்களுக்கு முன்பு பபுள்கம் சாப்பிட்டபடியே தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்களுக்கு போஸ் கொடுத்து இருந்தார். அதுபோல சில ரசிகர்களிடம் கெத்தாக சூர்யா பேசிக் கொண்டிருந்தார். அதோடு சின்ன வயது சிம்பு போல ஒரு பேஸ் ரியாக்ஷன் கொடுத்து இருந்தார். இது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வீடியோக்களை நீக்குவதற்காக சூர்யா மற்றும் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததாக சில புகார்கள் எழுந்தது. இது பற்றி நேற்று இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
சூர்யா சேதுபதி பேச்சு
அதற்கு விஜய் சேதுபதி "எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து, மிரட்டல் நடந்து இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்" என்று பேசி இருந்தார். அதோடு தன்னுடைய மகனிடம், "மகனே பார்த்து பண்ணுடா" என்று சொல்லி இருந்தார். அதைத்தொடர்ந்து பேசிய சூர்யா வந்திருந்த அனைவருக்கும் நன்றி சொல்லி இருந்தார். தன்னைப் பற்றிய ட்ரோல் மற்றும் சர்ச்சைகளுக்கு சிரித்தப்படியே பதில் கூறியிருந்தார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
சூர்யா பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் பரவி வரும் நிலையில் அதை அமைதியாக கையாளுவதற்காக விஜய் சேதுபதி எடுத்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். விஜய் சேதுபதியின் இந்த மன்னிப்பு வீடியோ சர்ச்சைகளை சற்று அமைதியாக மாற்ற முயற்சி இருக்கிறது. ஆனாலும் சூர்யா நடித்த பீனிக்ஸ் படம் வெளியான பிறகு மக்கள் மத்தியில் அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications