விஜய் சேதுபதி சொல்லி தானே பாய்ஸ் பற்றி பேசினேன்! மாற்றி பேசுவது யாரு? அர்னவ் இன்ஸ்டா ஸ்டோரி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று அர்னவ் வெளியேறும் போது ஆண் போட்டியாளர்கள் பற்றி பேசியதற்கு விஜய் சேதுபதி கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து பகிரப்பட்ட மீம்ஸ்களை அர்னவ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து நேற்று அர்னவ் வெளியேற்றப்பட்டது வாக்குகளின் அடிப்படையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் அர்னவ் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் அர்னவ் பேசாததை தர்ஷா தன்னிடம் சொன்னதாக அங்கு இருக்கும் ஆண் போட்டியாளர்களிடம் சொன்னதால் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. விஜே விஷால் உட்பட பலர் அர்னவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அருண், அர்னவை பார்த்து நீ ஜால்ரா போடுற என்பது போல் எல்லாம் திட்டியிருந்தார். ஆனால் நேற்று விஜய் சேதுபதி தர்ஷாவிடம் அர்னவ் உங்களை பாய்ஸ் டீம் மென்டலா டார்ச்சர் பண்ண சொல்லி இருக்காங்க என்று சொன்னாரா? என்று கேட்க, அதற்கு தர்ஷா இறுதியில் இல்லை என்று சொல்லி இருந்தார். தன் மீது குற்றமில்லை என்பது நிருபனம் ஆனாலும் கடைசியில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இந்த கோபத்தை அர்னவ் தன்னுடைய டிராபி மீது காட்டி இருந்தார். அந்த டிராபியை கோபமாக தூக்கி போட்டு உடைத்து விட்டு வெளியே வந்தார்.
நிகழ்ச்சியை விட்டு எலிமினேஷன் ஆகி வெளியே வந்ததும் அர்னவிடம் விஜய் சேதுபதி, "நான் உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லவா? நீங்க தர்ஷாவிடம் பாய்ஸ் டீம் உங்களை மென்டலா டார்ச்சர் பண்ண சொன்னாங்க என்று சொல்லல்ல" என்று சொன்னார். அதோடு உங்கள் மனதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் பற்றி இருக்கும் கருத்துக்களை கேட்டு விடுங்க என்று சொல்ல, அதற்கு அர்னவ் எல்லாத்தையும் கேட்கலாமா? சார் என்று மைக்கை கீழே இறக்கிவிட்டு கேட்க மனசில் இருப்பதை எல்லாம் கேளுங்க என்று முதலில் சொல்கிறார்.
அதற்கு பிறகு அர்னவ் உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் பேசுகிறார். அப்போது பெண்கள் அணி ராக். பாய்ஸ் கேங் ஜால்ரா. அதிலும் முத்துக்குமார், அருண், விஷால், சத்யா எல்லாரும் எதுக்குடா பிக் பாஸ்க்கு வந்தீங்க? உங்க கூட நான் சேர்ந்து இருக்கல என்பதற்காக நீங்க எல்லாரும் சேர்ந்து என்ன குத்துவீங்களா? என்று வாடா போடா என பொறுமையில் பேச உடனே குறுக்கிட்ட விஜய் சேதுபதி உள்ளிருக்கும் போட்டியாளர்கள் என்னுடைய கண்டஸ்டண்ட் நீங்க இப்போ இங்க பேசுனதை எல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசி இருக்கணும். அதை விட்டுட்டு இங்க இதெல்லாம் பேசக்கூடாது என்று தடுத்திருக்கிறார்.
ஆனால் கடந்த வாரத்தில் ரவீந்தரிடம் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் பற்றிய உங்கள் ரிவ்யூவை சொல்லுங்க என்று கேட்டதும் ரவீந்தர் ஒரு சிலரைப் பற்றி மட்டும் தான் நல்லபடியாக பேசினார். மற்றவர்களை பற்றி எல்லாம் கழுவி உத்தியிருந்தார். அதிலும் அருணை நீ முதுகுல குத்தாத என்று சொல்லி இருந்தார். ரஞ்சித்தை சாமி, தங்கம்னு நடிச்சிட்டு எல்லாம் இருக்க முடியாது உண்மையா விளையாடுங்க என்று சொல்லி இருந்தார். சிலரிடம் நீ ஃபேக் என்று கூட முகத்துக்கு நேராக பேசியிருந்தார்.
அப்போதெல்லாம் விஜய் சேதுபதி இதுபோல தடுத்து நிறுத்தவில்லை. ஆனால் நேற்று அர்னவிடம் மட்டும் அதனுடைய கோபத்தை காட்டியிருந்தார். இதனால் இது விமர்சனங்களை சந்தித்து வருகிறது இது சம்பந்தமாக பலர் அர்னவிற்கு சப்போர்ட் ஆக வீடியோக்கள் ஷேர் செய்து வருகிறார்கள். அதை அர்னவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications