தன்னை பற்றிய நெகடிவ் கமெண்ட்ஸுகளுக்கு நச்சுனு விளக்கம் கொடுத்த விஜய் சேதுபதி.. இனி சர்ச்சை ஓவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வார பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசிய வீடியோ இணையத்தில் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி விஜய் பற்றி தான் பேசிவிட்டார் என்று பல விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அதோடு அவரை பலரும் நெகட்டிவாக திட்டி தீர்த்து வருகின்றனர். இதற்கிடையே அவர் தன்னைப் பற்றிய நெகடிவ் கமெண்ட்ஸுகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதில் கொடுத்த ஒரு வீடியோவும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க தொடங்கி, வில்லனாகவும், ஹீரோவாகவும் எப்போது சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகியபோது அந்த இடத்திற்கு விஜய் சேதுபதி வந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து சொன்னார்கள்.

Vijay Sethupathi Bigg Boss Vijay

பிக் பாஸ் தொகுப்பாளர்

இப்போது அவரே மூன்று சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நேரத்தில் தான் போனவாரம் சனிக்கிழமை எபிசோடில் லீடர்ஷிப் பற்றி அவர் பேசியது அரசியல் ரீதியாக இணைத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் முதல்வர் விஜய்யை தான் சொல்லிவிட்டார் என்று விஜய் ரசிகர்கள் அவரை பற்றி திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால் அது பற்றி அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

நெகட்டிவ் விமர்சனம்

இவர்களிடையில் அயன் மேன் படத்திற்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியதால் பல விமர்சனங்கள் வந்த சமயத்தில் அவர் பேசிய ஒரு வீடியோ இப்போ வைரலாகி வருகிறது. அதில், நான் சினிமாவில் ஆரம்பத்தில் வந்தபோது எனக்கு நெகட்டிவ் எதுவும் வரவில்லை. ஆனால் சமீப காலமாக அதிகமான நெகட்டிவ் வருகிறது. இதையெல்லாம் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னைப் பற்றி தவறாக பேசுபவர்களிடம் போய் நான் அப்படி இல்லை என்று விளக்கம் கொடுக்க முடியாது.

விஜய் சேதுபதியின் விளக்கம்

நமக்கு ரசிகர்கள் அன்பை கொடுக்கிறார்கள், அதை நாம் சந்தோஷமாக பெற்றுக்கொள்கிறோம். அதேபோல அவர்கள் வெறுப்பை கொடுக்கும்போது நான் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்ல முடியாது. இதே போல நெகட்டிவ் நான் மட்டுமல்ல எம்ஜிஆரும் பார்த்திருக்கிறார், சிவாஜியும் பாத்திருக்கிறார், ரஜினியும் காத்திருக்கிறார், விஜயும் பார்த்திருக்கிறார். இது எனக்கு மட்டுமே நடக்கிறது என்று நான் ரியாக் பண்ண முடியாது. பேசுறவங்க பேசிட்டு போகட்டும் என்று நம்முடைய வேலையை பார்த்துட்டு போக வேண்டியது தான் என்று அந்த பேட்டியில் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

அந்த பேட்டியில் கூட அவர் விஜயை பற்றியும் பெருமையாகத்தான் பேசி இருக்கிறார். ஆனால் இப்போது விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொன்ன விஷயம் அவருக்கு எதிராக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் பேசிய பழைய வீடியோவை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+