வெளியேறுகிறாரா விஜய் சேதுபதி? பிக் பாஸை ஹேண்டில் செய்ய முடியலயா? நல்லவேளை, தப்பித்தார் கமல்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மற்ற பிக்பாஸ் சீசன்களைவிட, இந்த 9வது சீசன் பலவிதமான விமர்சனங்களை பெற்று தந்து வருகிறது.. முதல் நாளிலிருந்தே பல சண்டைகளை பார்க்க முடிகிறது.. இந்த முறை நிறைய போட்டியாளர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் இந்த முறை பிக்பாஸ் சீசன் குறித்து தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

valai Pechu Anthanan என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் அந்தணன், :"பிக்பாஸை கண்டுபிடித்த புண்ணியவான் யாரென்று தெரியவில்லை.. ஒரு கான்செப்ட்டை பிடித்து, அதற்காக 20 பேரை வீட்டிற்குள் அனுப்பி, ரகளை, பிரளயத்தை ஏற்படுத்துவதையும், இதைப்பார்த்து இந்த நாட்டு மக்கள் சந்தோஷமாக இருங்க என்று சொல்வதையும் சின்ன புத்தி என்பதா? புத்திசாலித்தனம் என்பதா? தெரியவில்லை.

Television Vijay Sethupathi Kamal Haasan

இந்த ஒரு விஷயத்தை வைத்து பல நூறு கோடிகள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது.. தமிழிலும் பிக்பாஸ் நடத்தப்படுகிறது.. கமல்ஹாசன் முதன்முதலில் இந்த நிகழ்ச்சியை துவங்கியபோது, அனைவருக்குமே பெரிய பிரமிப்பு ஏற்பட்டது.

பிக் பாஸ் சீசன் 9

அவ்வளவு பெரிய நடிகர், நடிப்புலக அசுரன் என்பதையும் தாண்டி, அனைவராலும் மதிக்கக்கூடியவர், ஒரு சாதாரண டிவி நிகழ்ச்சிக்கு வருகிறாரே? என்று பலரும் வியந்து பேசினார்கள்.. ஒரு பெரும் தொகையை சம்பளமாக தந்து, கமலை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துவிட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.

கமல்ஹாசனின் ஆளுமை பண்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.. குறும்படம் என்ற கான்செப்டை கொண்டு வந்ததே கமல்தான்.. ஆனால் கமல் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிவிட்டார்.

நல்லவேளை கமல் வெளியேறிவிட்டார்

நல்லவேளை கமல் வெளியேறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.. ஒருவேளை கமல் இந்நேரம் இருந்திருந்தால், எவ்வளவு அவமானப்பட்டிருப்பார்? என்பதை விஜய் சேதுபதியை பார்த்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது..

விஜய் சேதுபதியும் சளைத்தவரல்ல.. மிக திறமையான கலைஞன்.. கீழ்மட்டத்திலிருந்து உயரத்துக்கு வந்துள்ள மனிதர்.. ஆனால் அவருக்கு தரவேண்டிய மரியாதையை இந்த கூட்டம் தரவில்லை.. அவரை வைத்துகொண்டே சண்டை போடுகிறார்கள்.. அவர் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்.

கமலிடம் இருந்த ஆளுமை பண்பு, விஜய்சேதுபதியிடம் இல்லை.. விஜய்சேதுபதி முறைத்தாலும்கூட, அவரை யாருமே கண்டுகொள்வதில்லை.. மோசமாக, கேவலமாக கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்கள்.. அதிலும் இந்த 9வது சீசனை திட்டாத ஆட்களே கிடையாது..

பரிதாபங்கள் கோபி

பரிதாபங்கள் கோபி, பிக்பாஸ் சீசனை வச்சு கிழிகிழின்னு கிழித்து வீடியோ போட்டுள்ளனர்.. அதை 1 மில்லியன் பேர் பார்த்துள்ளார்கள் என்றால் பிக்பாஸ் மீது எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இவர்கள் எல்லாம் உற்சாகம் தராவிட்டால் எப்படி 1 மில்லியனை தாண்டி போகும்? அப்படியானால் விஜய் சேதுபதி ஹேண்டில் பண்ண முடியவில்லையா? தெரியவில்லை.

பிக்பாஸ் சீசன் 9 மீது பலருக்கும் இருந்த எரிச்சலையும், கோபத்தையும் சரியாக உணர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிறிது கடுமையை காண்பித்தார்.. சில விஷயங்களை முரட்டுத்தனமாகவும் சொன்னார்.. எனினும் இன்னும்கூட விஜய்சேதுபதி போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்திருக்க வேண்டும்.

குற்ற உணர்ச்சி

அவர்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறார்.. அப்போதுகூட போட்டியாளர்கள் திருந்தவில்லை.. ஆனால் விஜய் சேதுபதிக்கே குற்ற உணர்ச்சி விரைவில் வரும். காரணம், இப்போதுள்ள கும்பல், எந்த காலத்திலும் விஜய் சேதுபதியை மதிக்க போவதில்லை..

இன்னும் 70 நாட்கள் நகர்த்த வேண்டியிருக்கிறது.. வைல்டு கார்டு என்ட்ரியில் வரப்போகும் போட்டியாளர்களாவது அருவெறுப்பில்லாமல் நிகழ்ச்சியை கொண்டுபோனால் நன்றாக இருக்கும்..

போட்டியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு வேறொரு குழுவிடம் உள்ளது.. அதற்கும் விஜய் சேதுபதிக்கும் சம்பந்தமில்லை.. எனினும் இவர்கள் இரு தரப்பும் இணைந்து செயல்படுகிறார்களா? என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது.

விஜய் சேதுபதி வெளியேறுவார்

ஆனால் இப்போதுள்ள நிலைமையே நீடித்தால், விரைவில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியிலிருந்து கட்டாயம் வெளியேறிவிடுவார்.. காரணம் விஜய் சேதுபதியை பொறுத்தவரை நல்ல சித்தாந்தம் கொண்டவர்.. பல புத்தகங்களை படிக்கக்கூடியவர்.. அடிப்படையிலேயே அறிவாளி..

இவரும் விலகிவிட்டால், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த, பிரபலமானவரையும், மரியாதைக்குரியவரையும், கண்டிப்பு நிறைந்தவரையும் எங்கே தேடிப்பிடிப்பார்களோ தெரியவில்லை' என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+