ஜி.வி. பிரகாஷ் என் படத்துக்கு பாட்டு போட மறுத்ததற்கு நன்றி! ஆண்ட்ரியா பெட்ரூம்ல படுக்குறீங்களா? - விஜய் சேதுபதி
சென்னை: தமிழ் சினிமாவில் உற்சாகமான படைப்புகள் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில், நடிகர் கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரைப்படம் 'மாஸ்க்'. இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனது வழக்கமான நகைச்சுவை மற்றும் அட்ராசிட்டி பேச்சால் இணையத்தையே கலக்கி விட்டார்.

விஜய் சேதுபதியின் வைரல் குண்டு
'மாஸ்க்' திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேடையில் மைக் பிடித்த விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷைக் கலாய்த்து பேசிய ஒரு வரிதான் இப்போது இணையத்தில் செம வைரல். விஜய் சேதுபதி சிரித்தபடி ஜிவி பிரகாஷ் சார் உங்களுக்கு நன்றி நீங்க என் படத்திற்கு பாட்டு போட மறுத்ததற்காக என்று கூறியதும், அரங்கம் முழுக்க சிரிப்பலையில் மூழ்கியது. அவர் விளையாட்டாக பேசிய இந்தக் கருத்து, இருவருக்கும் இடையேயானச் சினேகத்தை காட்டுவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி உள்ளிருக்கும் போட்டியாளர்களின் வன்மம் நிறைந்த கருத்தை பார்த்து இப்போ அவரும் ஜிவி பிரகாஷ் மீது இருக்கும் வன்மத்தை மேடையில் கக்கி விட்டாரா? என்றும் சிலர் கலாய்த்து வருகிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி என்ன அர்த்தத்தில் பேசினார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.
இளமைக்கான சந்தேகம்
விஜய் சேதுபதியின் நகைச்சுவை அங்கே முடியவில்லை. எப்போதும் ஃபிட்னஸ்ஸுடன், இளமையுடன் இருக்கும் நடிகை ஆண்ட்ரியாவை கலாய்த்த விதம் எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. ஆண்ட்ரியாவைப் பற்றிப் பேசிய விஜய் சேதுபதி, "சின்ன வயசுல பீச்சில் ஒரு சிலையை பார்த்தேன். அந்த சிலை போலவே ஆண்ட்ரியா இருக்கின்றார்" என்று பாராட்ட ஆரம்பித்தார்.
அதிர்ச்சி சந்தேகம்
அதன் பிறகு, "ஒரு விளம்பரம் ஒன்றில் நடித்த ஆண்ட்ரியா, 'மாஸ்க்' படம் வரை அப்படியே, இந்த அளவுக்கு இளமையுடன் எப்படி இருக்கின்றார் என்றே தெரியவில்லை. அவர் பெட்ல தூங்குகின்றாரா? அல்லது ஃப்ரிட்ஜில் தூங்குறாரா? என்று சந்தேகமா இருக்கு" என்றுச் சந்தேகத்தைக் கிளப்பினார். மேலும், "நாளைக்கு என்னுடைய மகனும் வந்து, 'ஆண்ட்ரியா எப்படி அப்படியே இருக்கின்றார்' என்று வியந்து பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்று அவர் கூறியதும், அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.
கவின் மீதான எதிர்பார்ப்பு
'மாஸ்க்' திரைப்படம் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இது ஒரு த்ரில்லர்-டிராமா வகையைச் சேர்ந்தப் படமாகும். நடிகர் கவின், சமீபத்தில் வெளியான 'டாடா' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். ஆனால், அதற்குப் பிறகு அவர் நடிப்பில் வெளியானப் படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
அடுத்த படங்கள்
தற்போது 'மாஸ்க்' மற்றும் 'ஹாய்' உள்ளிட்டப் படங்களில் அவர் நடித்துள்ளார். இதனால், 'மாஸ்க்' படம் மூலம் கவின் தனது நடிப்புத் திறமையை மறுபடியும் நிரூபித்து, ஒரு பலமான 'கம்பேக்' கொடுப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் இந்த ஜாலியான பேச்சு, 'மாஸ்க்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சமூக வலைதளங்களில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆக்கியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications