திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம்
சென்னை: தமிழ், தெலுங்கு என இரு மொழி ரசிகர்களிடமும் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில் நடந்த "ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு" படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக விழாக்களில் படக்குழுவினரை பாராட்டி பேசுவது வழக்கம். ஆனால் இந்த முறை தயாரிப்பாளர் சார்மி கவுரை பற்றி பேசும்போது, "அவரோட மட்டும் யாரும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க" என்று சிரிப்போடு விஜய் சேதுபதி சொன்னது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் சேதுபதி பேச்சு
மேடையில் பேசிய விஜய் சேதுபதி, "இந்த தயாரிப்பு நிறுவனத்தோட வேலை செய்றவங்க யாராக இருந்தாலும் சார்மியோட நெருக்கமான நண்பர்களாக இருக்காதீங்க. ஏன்னா அவங்க வீட்டுல சாப்பாடு போட்டே சாகடிச்சிடுவாங்க" என்று நகைச்சுவையாக கூறினார்.
அதோடு, "நான் ஏற்கனவே கொஞ்சம் பூசின மாதிரி இருப்பேன். அதுலயும் சார்மி வீட்டுக்கு போனா விதவிதமான உணவுகளை வச்சு இன்னும் வெயிட் ஏத்திடுவாங்க. அதனாலதான் ஒரு கட்டத்தில் டயட் கோர்ஸ்ல கூட சேர்ந்தேன்" என்று கூறியதும் அரங்கமே சிரிப்பில் மூழ்கியது.
சார்மி அகராதி
வெறும் நகைச்சுவையோடு மட்டும் நிற்காமல், தயாரிப்பாளராக சார்மியின் திறமையையும் விஜய் சேதுபதி பாராட்டினார். "பூரி ஜெகன்னாத் ஏதாவது பெரிய விஷயத்தை சொன்னா அது முடியுமா முடியாதா என்று யோசிக்க மாட்டாங்க. அதை எப்படி சாதிக்கலாம் என்று தான் யோசிப்பாங்க. சார்மி அகராதியில் 'NO'ன்னு ஒரு வார்த்தையே கிடையாது" என்று கூறினார்.
குறிப்பாக "லைகர்" படத்துக்காக உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசனை அழைத்து வந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த விஜய் சேதுபதி, சார்மியின் தைரியம் மற்றும் மன உறுதியை வெகுவாக பாராட்டினார்.
கையெடுத்து கும்பிட்ட சார்மி
விஜய் சேதுபதி தொடர்ந்து பாராட்டியதை கேட்டுக் கொண்டிருந்த சார்மி, மேடையிலேயே கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார். அவரது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. "சார்மியை இவ்வளவு மனதார பாராட்டும் விஜய் சேதுபதி வேற லெவல்" என்று ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளராக
2002-ம் ஆண்டு சிம்பு நடித்த "காதல் அழிவதில்லை" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சார்மி கவுர். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்தார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் கலக்கியவர். ஆனால் நடிப்பை விட தயாரிப்பில்தான் தனது எதிர்காலம் இருப்பதாக முடிவு செய்த அவர், கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு முழுநேர தயாரிப்பாளராக மாறினார்.
பூரி ஜெகன்னாத்தின் வலது கை
இன்று தெலுங்கு சினிமாவில் பூரி ஜெகன்னாத் பெயரை சொல்லும்போது, சார்மி பெயரையும் சேர்த்து சொல்லும் அளவுக்கு இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். படத்தின் பைனான்ஸ் முதல் திட்டமிடல் வரை பல முக்கிய பொறுப்புகளை கவனித்து வருகிறார் சார்மி. அதனால்தான் தெலுங்கு சினிமாவில் அவரை "லேடி பவர் ஹவுஸ்" என்று கூட அழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

திரிஷாவின் நெருங்கிய தோழி
சார்மி குறித்து பேசும்போது நடிகை திரிஷாவை தவிர்க்க முடியாது. பல ஆண்டுகளாக இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். விடுமுறை பயணங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என பல தருணங்களில் இருவரும் ஒன்றாக காணப்பட்டுள்ளனர். இதனால் "திரிஷாவின் பெஸ்ட் ஃப்ரெண்ட் தயாரித்திருக்கும் படம் என்பதால் கண்டிப்பாக பார்க்க வேண்டும்" என்று ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் "ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு" திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் கூட்டணி, சார்மியின் தயாரிப்பு, வித்தியாசமான கதைக்களம் என பல காரணங்களால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருவது விஜய் சேதுபதி சொன்ன ஒரு வரிதான்... "சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க... சாப்பாடு போட்டே சாகடிச்சிடுவாங்க!"என்றது தான்.
-
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
நடிகை ஸ்வாசிகா கணவர் பற்றி சொன்ன வார்த்தை.. மலையாள ரசிகர்கள் கோபம்? ஆனால் நெட்டிசன்கள் சப்போர்ட் -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்













Click it and Unblock the Notifications