தெலுங்கு பிக்பாஸ்க்கு கெத்தா போன விஜய் சேதுபதி.. அங்க சொன்ன வார்த்தை! அந்த நடிகையும் இருக்காங்களே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 8வது சீசனில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு இருந்த போட்டியாளர்கள் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்விக்கு கூலாக பதில் அளித்திருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி கலக்கி கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலேயே இவர் என்ன செய்யப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு என் வழி தனி வழி என்று இவர் காட்டும் வித்தியாசம் அதிகமாக பேசப்படுகிறது.

அதே நேரத்தில் போட்டியாளர்களை பேசவிடாமல் பேசுகிறாரே என்பது பலருடைய மனக்குமுறலாக இருக்கிறது. ஆனால் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் என்னை சுத்த விடுகிறார்கள் அவர்களை நான் சுத்த விடுகிறேன் என்று விஜய் சேதுபதி கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் வழக்கம் போல தன்னுடைய திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் முடிவடைந்த விடுதலை 2 திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை போல தெலுங்கிலும் பிக் பாஸ் 8வது போய்க் கொண்டிருந்தது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தெலுங்கில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விட்டது. நேற்று அந்த நிகழ்ச்சியின் க்ராண்ட் பினாலே நடைபெற்றது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் தான் நடித்த விடுதலை 2 திரைப்பட புரமோஷனுக்காக விஜய் சேதுபதி தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் 8வது சீசன் டைட்டில் வின்னர் ஆக நிகில் தேர்வாகி இருந்தார். அவருக்கு 55 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
அதுபோல விஜய் சேதுபதி தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது அங்கு இருந்த போட்டியாளர்கள் சிலர் விஜய் சேதுபதியிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஜய் சேதுபதி கூலாக தெலுங்கில் பதில் சொல்லி இருக்கிறார். அதில் ஒரு போட்டியாளர் சார் நீங்க இங்க வந்தது கூஸ்பம் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி எனக்கு நாகார்ஜுனா சார் முன்பு நிற்பது கூஸ்பம் ஆக இருக்கிறது என்று சொல்கிறார்.
அதுபோல விஜய் சேதுபதியோடு நடிகை மஞ்சுவாரியரும் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு போட்டியாளர் எனக்கு விஜய் சேதுபதி என்றால் ரொம்ப பிடிக்கும் சார் என்று சொன்னதும் விஜய் சேதுபதி ஐ லவ் யூ என்று சொல்ல, அந்த கேட்டு அந்தப் பெண் போட்டியாளர் ஐயோ என்று வெட்கத்தில் முகம் சிவக்கிறார்.

அதுபோல இன்னொரு போட்டியாளர் விஜய் சேதுபதி இடம் சார் நீங்க நல்லா சாப்பிடுவீங்கன்னு தெரியும் ஆனால் எவ்வளவு சாப்பிட்டாலும் நீங்க இப்படியே இருக்கீங்களே அது எப்படி சார் என்று கேட்க, எவ்வளவு சாப்பிட்டோம் என்பது விஷயம் அல்ல அதை ரசித்து சாப்பிடணும் என்று சொல்லி இருக்கிறார். அதைதொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது அங்கிருந்த போட்டியாளர்களும் விஜய் சேதுபதியை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த வாரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியிலும் விடுதலை 2 பட குழுவினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அதில் விஜய் சேதுபதி மட்டும் கலந்து கொள்ளவில்லை. காரணம் அவர் தொகுப்பாளராக இருக்கும்போது கெஸ்ட் ஆக பிக் பாஸ் வீட்டிற்குள் போகாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் சூரி, மஞ்சு வாரியர், கென் போன்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று உள்ளிருந்த போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications