லீடர் பற்றி விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை.. கடுப்பான விஜய் பேன்ஸ்! இன்றைய பிக்பாஸிலும் பஞ்சாயத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்று சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி போனவார தலைவராக இருந்த சாதிகாவிடம் லீடர் பற்றி கேட்ட கேள்வி சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிகமான ரசிகர்கள் விஜயை குறி வைத்து விஜய் சேதுபதி பேசியிருக்கிறார் என்று விமர்சித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இன்றைய எபிசோடிலும் இன்னும் விஜய்க்கு பதிலடி கொடுக்கிற மாதிரி விஜய் சேதுபதி பேசுவதாகவும் சில செய்திகள் பரவி வருகிறது.

லண்டனில் விஜய், அஜித் சந்தித்துக் கொண்ட நிகழ்வுகள் ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதும் வேற லெவலில் வைரல் ஆகி வருகிறது. விஜய் சேதுபதி போனவார தலைவராக இருந்த சாதிகாவிடம், "லீடர்னா என்னன்னு தெரியாமல்... லீடர்ஷிப்னா என்னன்னு புரியாமல் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு.. பிரச்சனை என்றதும் எதிர்க்கட்சி மீது பழியை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடுவது லீடர்ஷிப்புக்கான குவாலிட்டி இல்ல.. ஏமாற்றி வேலை.." என்று பேசி இருந்தார்.

Bigg Boss Tamil 10

விஜய் சேதுபதி விமர்சனம்

இவர் இப்படி பேசிய ப்ரோமோ நேற்று வெளியானதுமே ரசிகர்கள் விஜய் சேதுபதியை தாக்க தொடங்கி விட்டார்கள். விஜய் சேதுபதி விஜயை தாக்கி தான் இப்படி பேசுகிறார் என்று விமர்சனங்களை வைக்க தொடங்கி வட்டனர். அதற்குப் பிறகு எபிசோடு வந்தது அப்போது கூட சாதிகாவிடம் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் சரியாக செஞ்சீங்களா? என்று கேட்டார். அதோடு எதனால் உங்கள் வாக்குறுதிகள் செய்யப்பட முடியவில்லை? எந்த பிரச்சனையை வந்தாலும் அந்த நேரத்தில் சரியாக முடிவெடுக்க வேண்டும். பிரச்சனை வந்ததும் ஓடி போக கூடாது என்று மீண்டும் அழுத்தமாக பேசிய சீன்களும் காட்டப்பட்டது.

Bigg Boss Tamil 10

விஜய் சேதுபதியை திட்டும் ரசிகர்கள்

உடனே நெட்டிசன்கள் விஜயை தான் சொல்கிறார் என்று சோசியல் மீடியாவில் அவருக்கு எதிராக பல போஸ்டுகள் போட்டு வருகின்றனர். ஏற்கனவே இதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் விடிவி கணேஷிடம் நீங்க சட்டசபை பார்க்க போகலையா? என்று விஜய் சேதுபதி கிண்டலாக பேசி இருந்தார். அந்த வீடியோக்களையும் இப்போது ரசிகர்கள் ஷேர் செய்து நீங்க ஆரம்பத்திலிருந்து விஜய் மீது பொறாமையிலிருந்து இருக்கிறீங்க, அதனால் தான் இப்படி எல்லாம் பேசுறீங்க என்று சொல்கிறார்கள்.

Bigg Boss Tamil 10

விஜய் சேதுபதி பதில்

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். நிஜ வாழ்க்கையில் நீங்க அப்படித்தானா? என்று பர்சனல் அட்டாக்கும் தொடங்கி விட்டார்கள். இதனால் இன்றைய எபிசோடில் இது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் கொடுப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு இதுபோல எபிசோடில் பதிலடி கொடுத்திருக்கிறார். அதேபோல இந்த முறையும் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+