கேள்வி கேட்டால் பதில் சொல்லணும், சமாளிக்க கூடாது.. விஜய் சேதுபதி பேச்சால் புதிய பஞ்சாயத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சனிக்கிழமை எபிசோடில் பேசியது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. முதலில் லீடர்ஷிப் பற்றி பேசி இருந்தார். பிறகு பொறுப்பில் இருப்பவர்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும், கண்ணீர் விட்டு சமாளிக்கக்கூடாது என்று பேசி இருக்கிறார். இது அந்த நிகழ்ச்சியில் முதல் வார தலைவராக இருந்த ஷாதிகாவை பார்த்து சொன்னதா? அல்லது தற்போதைய அரசியல் நிகழ்வுகளை வைத்து விஜயை கேள்வி கேட்கிறாரா? என்ற விவாதம் இணையத்தில் எழுந்திருக்கிறது.

Vijay Sethupathi

விஜய் சேதுபதி பேச்சு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டு தலைவராக இருந்து பதவி விலகிய ஷாதிகாவை விஜய் சேதுபதி சரட்டு மேனிக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதோடு அவரை தேர்ந்தெடுத்த போட்டியாளர்களிடமும் கேள்வி எழுப்பி இருந்தார். அதாவது "தேர்ந்தெடுப்பதற்கு ஆள் இருக்கிறார்கள் என்பதற்காக, 'Yes, I am bad! I have a right to kill people' என்று சொல்லிவிடலாமா? இரண்டு சொட்டுக் கண்ணீருக்கு மயங்கிவிடுவீர்கள் என்றால், எதற்கு கருத்துத் தெரிவிக்கிறீர்கள்?

பொறுப்பில் இருப்பவர்களிடம் கருத்துக் கேட்டால், அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அதுதான் அவர்களது வேலை. அதற்காக அழுது சமாளிக்கக்கூடாது. நல்லவன் வேடம் போடுபவர்கள் எவ்வளவு உறுதியாக வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால், அனைவருக்கும் சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டுமே! அழுகிற ஒருவருக்கு ஆதரவாகச் செல்ல வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அதனால் நீங்கள் டம்மியாகத் தெரிவீர்கள். ஜோக்கராகிவிடுவீர்கள்" என விஜய் சேதுபதி கடுமையாக பேசியிருந்தார்.

கமல்ஹாசன் உடன் ஒப்பீடு

இவர் இப்படி பேசியதும், அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று அவருக்கு சப்போர்ட்டாக சிலர் குரல் கொடுக்கின்றனர். அதில் என்னங்க நியாயத்தை பார்த்தீங்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசணுமா என்று அவருக்கு எதிராகவும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு முன்பு கமல்ஹாசன் இது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசியிருக்கிறார் ஆனால் அப்போதெல்லாம் இந்த மாதிரியான சர்ச்சைகள் வந்ததில்லை.

இதற்கு முந்தைய அரசுகளை கமல்ஹாசன் விமர்சித்து பேசி இருக்கிறார். ஆனால் அப்போது கமல்ஹாசனை இப்படி தனிப்பட்ட ரீதியில் யாரும் தாக்கி பேசியதில்லை. ஆனால் இப்போது விஜய் சேதுபதி பேசியதும் ஆட்சியில் இருக்கும் முதல்வர் விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதி பேசி விட்டார் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் விஜய் சேதுபதியை தாக்கி கமெண்ட் போட்டு வருவதை பார்க்க முடிகிறது.

விளக்கம் வரவில்லை

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் தன்னை பற்றி இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது கூட விஜய் சேதுபதி தான் எதற்காக அப்படி பேசினேன் என்று விளக்கம் கொடுக்காமல் இருப்பதும் தான் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய அமைதியை பார்க்கும் போது ஒருவேளை விஜய் சேதுபதி விஜயை தாக்கி தான் இப்படி பேசினாரா? அதனால் தான் அமைதியாக இருக்கிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

விஜய் சேதுபதியின் சைலண்ட்

ஆனால் இப்போ நடக்குற பஞ்சாயத்தை எல்லாம் பார்க்கும்போது இது கூட பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். போன சீசனில் இந்த நிகழ்ச்சியை பற்றி பெரியதாக பேசப்படாமல் இருந்த நிலையில் இப்போது விஜய் சேதுபதி சொன்ன வார்த்தைகள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இந்த நிகழ்ச்சியை பற்றி பேச வைத்துவிட்டது. இதனாலேயே இந்த வாரம் முழுக்க சைலண்ட் மோடில் இருக்கும் விஜய் சேதுபதி இதற்கெல்லாம் சேர்த்து சனிக்கிழமை எபிசோடில் பதிலடி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சரி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று பிக்பாஸ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+