லீடர்ஷிப் இல்ல துரோகம்.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை! நடிகர் அருண் ஆதங்க வீடியோ.. அம்பிகாவின் பதிலடி
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சண்டை, பிரச்சனைகள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே முடிந்துவிடும் என்று பார்த்தால் இப்போது அது வெளியில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி ஷாதிகாவின் லீடர்ஷிப் பற்றி பேசிய விஷயம் ஸ்பெஷல் மீடியாவில் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீரியல் நடிகர் அருண் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதற்கு அம்பிகா கொடுத்த கமெண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி சனிக்கிழமை எபிசோடில் பேசும்போது நீங்கள் இந்த வாரம் தலைவராக பதவி ஏற்பதற்கு முன்பு என்ன வாக்குறுதிகள் கொடுத்தீங்க? அதை எல்லாம் சரியா செஞ்சீங்களா? என்று கேட்டார். அதற்கு ஷாதிதா நான் கொடுத்த வாக்குறுதிகளை செய்ய முயற்சி செய்தேன் சார் ஆனால் முடியவில்லை என்று சொன்னதும் லீடர் என்றால் என்ன? லீடர்ஷிப் என்றால் என்ன என்பதை தெரியாமல் பதவிக்கு வருவதற்கு முன்பு வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு, பிறகு பிரச்சனை என்றதும் எதிர்க்கட்சியின் மீது பழியை போட்டுவிட்டு ஓடிவிடுவது ரிலேஷன் லீடர்ஷிப் கிடையாது என்று இவர் பேசியதும் விஜய்யை தான் சொல்கிறார் என்று தற்போதைய அரசியல் நடைமுறையுடன் ஒப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

சீரியல் நடிகர் அருண் வீடியோ
இது பற்றி சீரியல் அருண் பேசும்போது, சார் நீங்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சாரை பற்றி தான் பேசி இருக்கீங்க என்பது எல்லாருக்குமே தெரியும். இதற்கு முன்பு நீங்கள் ஒரு திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டீங்க அப்ப கூட அவங்க லேப்டாப் கொடுத்தை நீங்க பெருமையாக பேசி இருக்கீங்க. ஆரம்பத்தில் அந்த ஸ்கீம் கொடுக்கவே இல்லை கடைசி இரண்டு வருடத்தில் தான் கொடுத்தாங்க என்று உங்களுக்கு தெரியும்.
அப்படி இருந்தும் நீங்க திமுக கட்சியை பாராட்டி இருந்தீங்க. ஆனால் விஜய் சார் ஆட்சி அமைத்து 100 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் அவருடைய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை ஓடிப்போயிட்டார் என்று சொல்லுறீங்களே உங்களுக்கு விஜய் சார்மீது வருத்தம் இருந்தால் அதை நீங்கள் உங்களுடைய சோசியல் மீடியாவில் பதிவு செய்யலாம். அல்லது தனியாக நிகழ்ச்சி நடத்தி உங்கள் கருத்தை சொல்லலாம்.

அம்பிகா கமெண்ட்
அதை விட்டுட்டு ஒரு நிகழ்ச்சியில் பொறுப்பாக இருக்கிற நீங்க இதுபோல பேசிக் கொண்டிருப்பது நல்லாவா இருக்கு? உள்ளே இருக்குற போட்டியாளர்களுக்கு நீங்க என்ன பேசுறீங்கன்னு புரியாம குழப்பத்தில் இருக்கிறாங்க என்று அருண் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த வீடியோவுக்கு நடிகை அம்பிகா ஒரு கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அதில் "பிக் பிளாஸ்ட்" என்று சொல்லி இருக்கிறார்.
அதற்குப் பிறகு இன்னொரு கமெண்டில் விஜய் சேதுபதியின் பேச்சில் தனக்கும் ஏதோ ஒன்று சரியாக படவில்லை. கொஞ்சம் டூ மச்சாக பேசினார்.. நான் அதுபோல பேசவே இல்ல என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன் என்றும் அந்த கமெண்டில் அம்பிகா சொல்லி இருக்கிறார். இதனால் அவரும் விஜய் சேதுபதிக்கு எதிராக விஜய்க்கு சப்போட்டாக பேசியிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
