பிக் பாஸ் 8: நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா? கலக்குறாரு மனுஷன்
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது விஜய் சேதுபதி தான் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக சேனல் தரப்பில் இருந்து அறிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பள விபரம் வெளியாகி இருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் பிரபலம் அடைந்திருந்தாலும் தமிழில் பிரபலம் அடைவதற்கு காரணமே கமல்ஹாசன் தான். கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்றதுமே ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சிக்கு பெரிய எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது. அப்படி என்னதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கப்போகிறது என்று பலர் ஆர்வத்தோடு காத்திருந்தனர். ஒரு சிலர் அது எப்படி பிரபலங்களால் ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் இருக்க முடியும்? என்று நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே விவாதத்தையும் தொடங்கியிருந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கியதும் அந்த நிகழ்ச்சிக்கு அடையாளமாக கமல்ஹாசன் மாறிவிட்டார். அதனாலேயே ஏழு சீசன்களாக பிக் பாஸ் என்றால் கமல்ஹாசன் தான் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொல்லும் அளவிற்கு அடையாளமாக மாறி இருந்தார். ஆனால் எட்டாவது சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கமல்ஹாசன் தான் இந்த சீசனில் இருந்து விலகுவதாகவும் தனக்கு ரெஸ்ட் தேவைப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.
அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் தன்னால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆனால் கமல்ஹாசன் ஏஐ தொடர்பான படிப்பு படிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் கமல்ஹாசனுக்கு பிறகு யார் நிகழ்ச்சியை சரியாக வழிநடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதில் பல நடிகர்களின் பெயர் அடிபட்டது. அதில் பலர் அதிகமாக விஜய் சேதுபதி பெயரை தான் பலரை சொல்லி வந்தனர்.
அதனாலேயே விஜய் டிவி விஜய் சேதுபதியை டிக் அடித்து அவரை செலக்ட் செய்து விட்டனர். விஜய் சேதுபதி ஏற்கனவே சன் டிவியில் இரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இன்று புகழில் உச்சத்தில் வலம் வரும் விஜய் சேதுபதி எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதில் நடுநிலைத் தன்மையோடு கருத்து கூறி வருகிறார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரால் சரியாக வழிநடத்த முடியும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. நேற்று இந்த சீசனின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கமல்ஹாசன் போல அடுக்கு மொழி வசனங்களோ, எதுகை மோனை பஞ்ச் டயலாக் எதுவும் பேசாமல் ஒற்றை கண்ணை அடித்து விரைவில் வருகிறேன் என்பது போல சைகை காட்டி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் தொகுப்பாளர் என்றால் கோட் தான் அணிய வேண்டும் என்று எழுதப்படாத விதி இருக்கும் நிலையில் அதை விஜய் சேதுபதியும் தொடர்ந்து இருக்கிறார்.
அந்த நிலையில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக 50 கோடிக்கு மேலே சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 120 கோடி வரை வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications