பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா! விதிகளை மீறுகிறாரா VJS?
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவுள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் அவர் அங்கு சென்றால் தந்தையும் மகனும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு 15 முதல் 18 கோடி வரை ஊதியம் பெறுவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் போட்டியாளர்களை எதற்காக வந்திருக்கீங்க, சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க வந்திருக்கீங்களா என காட்டமாக கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்ச்சியை அவருக்கே உரித்தான ஸ்டைலில் அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பெண்கள் அணியும் ஆண்கள் அணியும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பெண்கள் அணியில் இருந்து அபியும் ஆண்கள் அணியில் இருந்து முத்துக்குமரனும் வீட்டை மாற்றி இருக்கிறார்கள். இதையடுத்து பல சண்டைகள், பிராங்குகள், தங்கள் அணிக்குள்ளேயே மோதல், எதிரணியுடன் மோதல் என சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் முதல் வார இறுதியில் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். அப்படியிருக்க பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்து நிகழ இருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருக்கிறாராம்.
இவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் ஃபீனிக்ஸ் வீழான் என்ற படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை அவர் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பிக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகிறது. எந்த படத்தையும் புரமோட் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது மகன் சூர்யாவின் பட புரமோஷனுக்காக அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications