ஒரே மேடையில் 3 பிக் பாஸ் தொகுப்பாளர்கள்.. VJS பேச்சை கேட்டு மோகன்லால் ரியாக்ஷன்! ஷாக் ஆன நாக அர்ஜுனா
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனா மோகன்லால் மற்றும் விஜய் சேதுபதி மூன்று பேரும் கலந்து கொண்டனர். அவர்களின் விஜய் சேதுபதி பேசியதை கேட்டு மற்ற இரண்டு பேரும் கொடுத்த ரியாக்சன் தான் பலருடைய கவனத்தைப் பற்றி வருகிறது.
நேற்று சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அண்ட் பவுண்ட் என்ற நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல இளம் திறமையானவர்களை ஊக்குவிப்பதற்காக சுமார் 12000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. அதில் 4000 கோடி தமிழகத்தில் முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதுபோல ஜியோ ஹாட்ஸ்டாரில் புதியதாக பல நிகழ்ச்சிகளும் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்வில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி தொகுப்பாளர்களும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். இது பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருந்தது. அப்போது தாதா சாகாப்தே பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு நாகார்ஜுனாவும், விஜய் சேதுபதியும் சேர்ந்து சால்வை அணிவித்து கௌரவப்படுத்தி இருந்தனர். பிறகு விஜய் சேதுபதி பேசியிருந்தார்.
அப்போது அவர் பேசும்போது, நான் என்னை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இவ்வளவு பெரிய மனிதர்களுடன் நானும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்ல, மோகன் எந்த ரியாக்ஷன் காட்டாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விஜய் சேதுபதி நான் மோகன்லாலின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய ஆட்டோகிராப் வாங்கி என்னுடைய வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கிறேன் என்று சொன்னதும் மோகன்லால் சிரித்துக்கொண்டார், ஆமாம் என்று சொல்வது போலவே அவரும் தலையாட்டி கொண்டிருந்தார்.
பிறகு நாகார்ஜுனா பற்றி விஜய் சேதுபதி பெருமையாக பேசி இருந்தார். அதாவது நாகார்ஜுனா சார் ஒரு ஜென்டில்மேன் நான் அவருடைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிருக்கிறேன். அவர் அவ்வளவு தன்மையாக பேசுவார். அவருக்கு வயதாகவே இல்லை. அவரிடம் கூலான எனர்ஜி எப்போதும் இருக்கும். சின்ன வயசிலிருந்து அவரை பார்க்கிறேன் ஆனால் நான் வளர்ந்து விட்டேன் அவர் மட்டும் இன்னும் அதேபோலத்தான் இருக்கிறார்.
என்னுடைய பேர குழந்தைகள் வந்தாலும் நாகார்ஜுனா சார் இப்படி தான் இருப்பார் போல. ஆராய்ச்சி பண்ணுகிறவர்கள் இவரை வைத்து ஆராய்ச்சி பண்ணுங்கள் இவருக்கு மட்டும் எப்படி வயதாகாமல் இருக்கிறது என்று கண்டுபிடிங்கள் என்று சொல்லிவிட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதுவுமே டிராமா கிடையாது. பிக் பாஸ் எனக்கு கண்ணாடியை போன்றது. ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் நான் என்னை பார்க்கிறேன் என்ன பேசி இருக்கிறார்.
தொடர்ந்து விஜய் சேதுபதி பேசும்போது, நாகார்ஜுனா சார் போலவே நானும் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்றேன், காரணம் எனக்கு முதலில் மாற்று கருத்துக்கள் இருந்தன. ஆனால் அந்த நிகழ்ச்சி மனிதர்களை படிக்கும் புத்தகத்தை போன்றது நானும் அங்கிருந்து பல விஷயங்களை இப்போது கற்றுக் கொண்டு வருகிறேன்.
அதில் பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன, எனக்கு பதில்களை விட கேள்விகள் தான் ரொம்ப பிடிக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சி என்னிடம் பல கேள்விகளை எழுப்புகிறது. நான் அதிலிருந்து பலவற்றை கற்றுக் கொள்கிறேன் என்று விஜய் சேதுபதி பேசியிருந்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications