லீடர்னா என்னன்னு தெரியாம எதிர்க்கட்சி மீது பழி.. பிக் பாஸில் விஜய்யை சீண்டிய விஜய் சேதுபதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்று சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி பேசியதுதான் இப்போ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ஒரு பக்கம் லண்டனில் விஜய், அஜித், திரிஷா எல்லோரும் மீட் பண்ணியதை பேசிக் கொண்டிருந்தாலும், அதையும் தாண்டி இப்ப பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சொன்ன விஷயம் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிக் பாஸ் பஞ்சாயத்து

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் விஜய் சேதுபதி பஞ்சாயத்து செய்வது ஒவ்வொரு சீசனில் வழக்கமாக நடக்கும் விஷயம். ஒரு வாரம் முழுக்க போட்டியாளர்கள் உள்ளே என்னவெல்லாம் செய்தார்களோ அதை பாராட்டுவதும், விமர்சிப்பதும் விஜய் சேதுபதியின் வேலை. அப்படித்தான் நேற்றைய எபிசோடிலும் கூட போட்டியாளர்களுக்கு வரிசையாக தனது அர்ச்சனையை தொடங்கினார். அதில் தலைவராக இருந்து பதவி விலகிய சாதிதாவுக்கு கொஞ்சம் அர்ச்சனை அதிகமாகவே கிடைத்தது.

Vijay Sethupathi

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி

அப்போது அவரிடம் லீடர்னா எப்படி இருக்கனும்? தலைவராகுறதுக்கு முன்னாடி யோசிக்காம அதை பண்ணுவேன், இதை பண்ணுவேன் என்று வாய்க்கு வந்ததெல்லாம் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு... பிரச்சனைன்னு வந்தா எதிர்க்கட்சி மீது பழியை போட்டுட்டு ஓடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே முதல்வர் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல வாக்குறுதிகள் சொல்லி இருந்தார். ஆனால் அது சிலவற்றை செய்ய முடியாமல் போகும்போது இதற்கு காரணம் எதிர்க்கட்சி என்று அந்த பக்கமாக பாலை திருப்பி விடுகிறார் என்ற விமர்சனம் இருக்கிறது.

சட்டசபை பஞ்சாயத்து

இதனாலையே விஜய் சேதுபதி விஜய்யை தாக்கி பேசினாரா? என்ற கேள்விகளும் எழந்து வருகிறது. விஜய் சேதுபதி சாதிகாவில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போனதற்காக சொன்ன விஷயத்தை இப்போ அரசியலுக்கு நிகழ்வுடன் முடிச்சு போட தொடங்கி விட்டார்கள். அது மட்டுமல்லாமல் முனியம்மா சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது வீட்டு தலைவர் பேசிக் கொண்டிருக்கையில் வெளிநடப்பு செய்ததையும் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பி இருந்தார்.

Vijay Sethupathi

பொதுவாக சட்டசபையில் எதிர்க்கட்சிக்காரர்கள் தான் வெளிநடப்பு செய்வாங்க. ஆனா நீங்க என்னன்னா உங்க சொந்த கட்சி தலைவர் பேசுவதை கேட்காமல் நீங்க வெளிநடப்பு செய்றீங்க? சட்டசபை எல்லாம் பார்க்கவில்லையா? என்று கேட்டிருந்தார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய விவாதம் இப்போ சோசியல் மீடியாவில் எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+