Phoenix Review: கெத்து காட்டிய விஜய் சேதுபதியின் மகன் படம் எப்படி இருக்கு? பீனிக்ஸ் விமர்சனம் இதோ
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடித்த பீனிக்ஸ் திரைப்படம் இன்று (ஜூலை நான்காம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.
பீனிக்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா சேதுபதி செய்த செயல்கள் விமர்சனங்களை சந்தித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் கதாநாயகனின் அண்ணனை சிலர் கொலை செய்து விடுகிறார்கள். இந்த விவகாரத்தில் அண்ணன் கொலைக்கு காரணமாக இருந்த எம்எல்ஏ வை கதாநாயகன் சூர்யா சேதுபதி கொன்று விடுகிறார்.

பீனிக்ஸ் பட கதை
அப்போது அவருக்கு சிறுவயது என்பதால் அவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார். அரசியல்வாதியை கொன்றால் சும்மா விடுவார்களா? அவர்கள் சிறையில் சூர்யாவை தீர்த்து கட்டுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் கதாநாயகன் அவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் சூர்யா ஆக்சன் கிங் ஆக மாறி இருக்கிறார். பல படங்களில் பல நடிகர்களுக்கு சண்டை பயிற்சி செய்த அனல் அரசு முதல் முறையாக இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
மிரட்டும் சண்டை காட்சி
அனல் அரசுவின் படம் என்றால் சும்மா இருக்குமா ஏகபோகமாக சண்டைக் காட்சிகள் சும்மா தெறிக்கிறது. ஆனால் சண்டை காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னும் படம் பெரிய அளவில் பெயர் வாங்கி இருக்கும். இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, முத்துக்குமார், ஹரிஸ் உத்தமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய கேரக்டருக்கு சரியானதை செய்திருக்கிறார்கள்.
முதல் பாதியில் பெரிதாக பேசாமல் கண் பார்வையிலேயே அனைவரையும் மிரட்டி கொண்டு இருந்த ஹீரோ படம் முழுக்க சண்டை மட்டும் போட்டுக் கொண்டே இருக்கிறார். சூர்யா சேதுபதி முதல் முறையாக தன்னுடைய அப்பா நடித்த சிந்து பாத் படத்தில் அவரோடு சில காட்சிகளுக்கு வந்திருந்தார். அந்த படத்தில் அவரை பார்த்ததற்கும் இப்போது கதாநாயகனாக பார்ப்பதற்கும் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது.
குறைகள்
அடுத்த படத்தில் கதை தேர்விலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அப்பாவை விடவும் சிறப்பான இடத்தை பிடிக்கலாம். சமீபகாலமாகவே சூர்யா சேதுபதி நடவடிக்கைகள் மற்றும் அவருடைய பேச்சு அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த படமும் பெரிதாக ட்ரோலில் சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சண்டை காட்சிகளில் சூர்யா மாஸ் ஹீரோவாக மாறி இருக்கிறார். திரைப்படத்தில் ஒரு சில குறைகளை தவிர பெரிதாக குறைகள் இல்லை. ஆனால் கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்தால் பீல் குட் பட வரிசையில் இடம் பிடித்திருக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications