“சுட்டா சூரியனை தொட்டுக்கிட்டு” பாட்டு தான் எனக்கு பிடிக்கும்! ஏனென்றால்? விஜய் மகன் பேச்சு! வெடிக்கும் விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் மகனும், இயக்குனராக அறிமுகமாக இருக்கும் ஜேசன் சஞ்சய் பேசி வரும் பேட்டிகள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன. அப்பா விஜய் பற்றிய அவரது பேச்சு ஒரு பக்கம் கவனம் ஈர்த்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் தனக்கு பிடித்தது சுட்டா சூரியனை தொட்டுக்கிட்டு போகலாம் டா பாட்டு தான் என்று அவர் சொல்லி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் மகனுக்கு பிடித்த பாடல்

அந்த பேட்டியில் ஜேசன் சஞ்சய்யிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டு எது என்று கேட்கப்பட்டது. அதற்கு எந்த யோசனையும் இல்லாமல் "சுட்டா சூரியனை தொட்டுக்கிட்டு போகலாம் டா" என்ற பாடல் தான் என்று சொன்னார். அதற்கு அவர் சொன்ன காரணமும் சுவாரஸ்யமாக இருந்தது. நான் யுவன் சாரின் தீவிரமான மிகப்பெரிய ஃபேன். சந்தோஷமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, நான் யுவன் சார் பாடல்களை தான் அதிகமாக கேட்பேன். அவர் இசை என்னுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. மனசு குழப்பமாக இருக்கும்போதெல்லாம் என்னை நானே அமைதி படுத்திக் கொள்ள இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லி இருக்கிறார்.

Jason Sanjay Vijay Trisha

ஜேசன் சஞ்சய் பேட்டி

அதோடு இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் சொல்லி இருந்தார். அதாவது யுவன் சார் பெயர் போட்ட 5, 6 டீ-ஷர்ட்டுகள் என்னிடம் இருக்கு. அதில் ஒரு டீசர்ட் போட்டு போட்டோ எடுத்தேன். அது அப்பா மூலமாக யுவன் சாருக்கு அனுப்ப சொல்லி இருந்தேன். அப்பாவும் அதை அனுப்பி வைத்திருந்தார். நான் அவருடைய ரசிகன் என்பது யுவன் சாருக்கு தெரியும் என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா ரசிகன்

மேலும் தனது முதல் படமான சினிமா தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவை சந்தித்த போது அவரை இயக்குனராகத்தான் சந்தித்தேன். ஆனால் அவரைப் பார்த்ததும் அதிகமாக பேச முடியவில்லை. அவர் என்னிடம் எப்படி இருக்கீங்க? என்று கேட்டார். நான் நல்லா இருக்கேன் என்று சொன்னேன். பிறகு அப்பா எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். அவரும் நல்லா இருக்காங்க என்று சொன்னேன். அப்புறம் பெருசா எதுவும் பேசவே இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது ஒரு ரசிகனின் இயல்பான ரியாக்ஷன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் சோசியல் மீடியாவில் இதை வேறுவிதமாக பார்க்கின்றனர். சில நெட்டிசன்கள் "சுட்டா சூரியனை தொட்டுக்கிட்டு போகலாம் டா" என்ற பாடலை குறிப்பிட்டது வெறும் பாடல் விருப்பமா? அல்லது இதற்குள் வேறு அரசியல் இருக்கிறதா? என்று விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

அரசியல் விவாதம்

குறிப்பாக விஜய்யின் அரசியல் பயணத்தை இணைத்து அப்பாவை போலவே மகனும் சூரியனைத் தான் தொடுவோம் என்று மறைமுகமாக சொல்கிறாரா? என்ற கருத்தையும் சோசியல் மீடியாவில் பரப்பி வருகிறார்கள். இதனால் திமுக தவெக தொண்டர்களுக்கு இடையேவும் விவாதம் ஏற்பட்டு இருக்கிறது. ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் பாடமான சிக்மா மீது எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நடிகராக அல்லாமல் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய ஜேசன் இந்தப் படத்தின் மூலம் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாகவும் பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். விஜய் பற்றி அவருடைய மகன் பெருமையாக பேச பேச அவருடைய ரசிகர்களும் தொண்டர்களும் மகனை இப்போ கொண்டாடி வருகிறார்கள். அதனாலேயே படத்தின் வசூல் அதிகரிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+