ஆன்மீக பயணம் செல்லும் விஜய்.. பிஸ்மி என்ன இப்படி சொல்றாரு? ப்ளூ சட்டை மாறன் பெயரையே மாத்திட்டாரு!
சென்னை: விஜய், கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆன்மீக பயணங்களில் ஈடுபட்டு வருவது பெரும் விவாதமாக மாறியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள இந்த முக்கிய கட்டத்தில், அவர் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு நகர்வும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் சீரடி சாய்பாபா ஆலயங்களில் தரிசனம் செய்வது பற்றி பிஸ்மி மற்றும் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருக்கின்றனர்.

தொடர்ந்து கோவில் தரிசனத்தில் விஜய்
முதலில் திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வழிபட்ட விஜய், அதற்கு அடுத்த நாளே மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில் சென்றார். அங்கு விசேஷ தரிசனம் செய்து, தனது அரசியல் பயணத்திற்கு வெற்றி வேண்டி பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்னும் பல ஆன்மீக தலங்களுக்கு செல்லும் திட்டமும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது சாதாரண தரிசனம் அல்ல; தேர்தல் முடிவுகளை முன்னிட்டு மிகவும் கணக்கிட்டு எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்று அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.
தனி விமானம்
ஷீரடி பயணத்தின் போது விஜய் தனி விமானத்தில் சென்றது மட்டுமல்லாமல், அவருடன் இரண்டு பெண்கள் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சிலர் அது நடிகை த்ரிஷா மற்றும் அவரின் தாய் என வதந்தி பரப்பினர். ஆனால் பின்னர் வெளியான தகவல்படி, அவர்கள் விஜய்யின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான விஷ்ணு ரெட்டியின் மனைவி மற்றும் மகள் என்பதும் உறுதியாகியுள்ளது.
அரசியல் சூழ்நிலை
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி அரசியலில் களம் இறங்கிய விஜய், இந்த தேர்தலை தனது முக்கியமான திருப்புமுனையாக பார்க்கிறார்.

பிஸ்மியின் கேள்வி
திரைப்பட விமர்சகர் பிஸ்மி தனது சமூக வலைதள பதிவில் நேரடியாக கேள்வி எழுப்பினார், "நேற்று திருச்செந்தூர், இன்று ஷீரடி... தேர்தல் முடிந்த பிறகு கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கிறார் விஜய். ஒருவேளை வெற்றி கிடைத்தால் அது பிரார்த்தனையாலா? இல்ல மக்களாலா?
கோவிலுக்குச் சென்றதால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்தால், அது மக்களை அவமதிப்பதல்லவா?" என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
ப்ளூ சட்டை மாறன் கலாய்ப்பு
அதேபோல் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், "சாய் ஜோசப் விஜய்" என்கிற வகையில் கலாய்த்து பதிவு செய்தார். இந்த பதிவு நேரடியாக விமர்சனமல்ல; ஆனால் விஜய்யின் தொடர்ச்சியான ஆன்மீக பயணத்தை சாடும் விதமாக இருந்தது.
-
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications