ஈரோடு, திருப்பூரில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம்.. எந்த இடம்? யாரெல்லாம் வராங்கன்னு பாருங்க
சென்னை: விஜய் டிவி வழங்கும் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் வரும் ஜூலை 20 மற்றும் ஜூலை 21ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறவிருக்கிறது.
இதில் நேயர்களின் அபிமான விஜய் டிவி தொடர் நட்சத்திரங்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளின் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். இதே போன்று கடந்த வாரம் 14, 15 ஜூலை 2024, விருத்தாசலம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களை நேரில் காண வந்திருந்தனர். சுமார் 5000 கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சுசித்ரா, அக்ஷிதா (பாக்கியலட்சுமி) தொடரில் இருந்தும், பிரவீன் ஆதித்தியா, அஞ்சலி பாஸ்கர் 'சக்திவேல்' தொடர், லட்சுமி பிரியா, ஸ்வாமிநாதன், மகாநதி தொடர், ராஜாவேல் , யோகி, கலக்கப்போவது யாரு தொடர், ஹர்ஷினி, கௌரவ் , சஞ்சீவ், லின்ஸி , சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தும் வந்து கலந்துகொண்டு நேயர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

வரும் வாரம் ஈரோடு மற்றும் திருப்பூர் நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் ஹேமா , வெங்கட் (பாண்டியன் ஸ்டோர்ஸ் 2), அக்ஷயா , விக்ரம் (ஆஹா கல்யாணம் ), வைஷு , சபரி (பொன்னி ), விக்கி ஷிவா, யோகி (கலக்கப்போவது யாரு). மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் அக்ஷரா , சஞ்சீவ், பத்மஜா, ஐஸ்வர்யா, பிரசன்னா ஆகியோர் இந்த விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் ஏஞ்சலின் மற்றும் வினோத் பாபு ஆகியோர்.

வரும் சனிக்கிழமை (20 July 2024) ஈரோட்டில் மாலை 5.30 மணிக்கு VET Institute of Arts & Science, Thindal, Erode நடைபெறும். திருப்பூரில் ஞாயிறு (21 July 2024) அன்று AVP College of Arts & Science, Thirumuruganpoondi, Tiruppur, மலை 5.30 மணிக்கு நடைபெறும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications