விருத்தாச்சலம், கும்பகோணத்தில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம்.. குவிந்த பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்களும் மக்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் வகையில் பல்வேறு நகரங்களில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் நாகர்கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து அதில் அதிகமானோர் கலந்து கொண்டு சின்னத்திரை பிரபலங்கள் பலரோடு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்திருந்தனர். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல நகரங்களில் இந்த கொண்டாட்டம் கொண்டாடுவதற்கு சேனல் தரப்பினர் முடிவு செய்து இருக்கின்றனர்.

அதில்,விஜய் நட்சத்திர கொண்டாட்டம் கடந்த வாரம் 14, 15 ஜூலை 2024, விருத்தாசலம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களை நேரில் காண வந்திருந்தனர். சுமார் 5000 கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சுசித்ரா, அக்ஷிதா (பாக்கியலட்சுமி) தொடரில் இருந்தும், பிரவீன் ஆதித்தியா, அஞ்சலி பாஸ்கர் 'சக்திவேல்' தொடர், லட்சுமி பிரியா, ஸ்வாமிநாதன், மகாநதி தொடர், ராஜாவேல் , யோகி, கலக்கப்போவது யாரு தொடர், ஹர்ஷினி, கௌரவ் , சஞ்சீவ், லின்ஸி , சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தும் வந்து கலந்துகொண்டு நேயர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். வரும் வாரம் சனி மற்றும் ஞாயிறு 21, 22 ஜூலை திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெறும். இதில் பங்குபெறப்போகும் நட்சத்திரங்களின் பெயர்கள் விஜய் டிவி விரைவில் அறிவிக்கும்.

-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications