என்னை எழுதியவள் நீ அம்மா..கண்ணீர் மல்க விருது வாங்கிய ஈரோடு மகேஷ்..விஜய் டிவியில் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில தருணங்கள் மகிழ்ச்சியானவை சில தருணங்கள் நெகிழ்சியானவை அப்படித்தான் பேச்சாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஈரோடு மகேசுக்கு அம்மாவின் கையால் வாங்கிய விருது அளவில்லாத ஆனந்தத்தை கொடுத்துள்ளது. தொலைக்காட்சி துறையில் 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள ஈரோடு மகேஷை பாராட்டி விருது கொடுத்த விஜய் டிவி. தனது குடும்பத்தினரை விருது விழா மேடையில் பார்த்த ஈரோடு மகேஷ் கண் கலங்கினார்.

ஈரோடு மகேஷ் பேசும் போது கேட்கும் பலருக்கு உற்சாகமாக இருக்கும். நிறைய மோட்டிவேசனலாக பேசுவார். அவரது மனைவி அவரை மோட்டிவேட் செய்தார். வெற்றிக்காக எவ்வளவு உயரம் போக வேண்டுமோ அவ்வளவு உயரம் போக வேண்டும். கண் வைத்து விடுவார்களே என்ற கவலை வேண்டாம் கண் பட்டாலும் பரவாயில்லை ஜெயித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விருது வாங்கும் கணவரைப்பார்த்து சொன்னார் மகேஷின் மனைவி.

Vijay Television Award: Erode Mahesh was in tears after receiving the award from his mother

மகேஷ் தனது அம்மாவைப்பார்த்து அதிகம் நெகிழ்ச்சியோடு பேசினார். அம்மாவிற்கு காது கேட்காது. அவருக்கு சிகிச்சை அளித்து காது பிரச்சினையை சரி செய்ய நினைத்த போது பொருளாதார வசதி இல்லை என்று சொன்னார். இப்போது பொருளாதார வசதி உள்ளது ஆனால் அவரது காது கேட்கும் திறனை திருப்பி தர முடியவில்லை என்று கூறி கண் கலங்கினார்.

Vijay Television Award: Erode Mahesh was in tears after receiving the award from his mother

அம்மா என்றாலே சம்திங் ஸ்பெஷல்தான். தமிழ் படிக்க வேண்டும். தமிழுக்காக சேவை செய்ய வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்த்துள்ளார் மகேஷ் அம்மா. அதை சொன்ன போது கேட்ட அத்தனை பேரின் கண்களும் கலங்கியது. தன்னுடன் பணிபுரியும் அத்தனை பேரையும் அறிமுகம் செய்து வைத்தார் மகேஷ்.

மகள், மனைவி, அம்மாவின் கரங்களால் விஐய் டிவியின் விருது பெற்றார் ஈரோடு மகேஷ். சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று மிகப்பெரிய உயரத்து சென்றவர்களில் ஈரோடு மகேசும் ஒருவர். அசத்தப்போவது யாரு? கலக்கப்போவது யாரு? ஜோடி நம்பர் ஒன், நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

Vijay Television Award: Erode Mahesh was in tears after receiving the award from his mother

அம்மாவின் கைகளில் முத்தம் கொடுத்த ஈரோடு மகேஷ், எல்லோரும் கவிதை எழுதுறியே எனக்கு என்ன கவிதை எழுதி தரப்போறே என்று அம்மா கேட்டாங்க என்று சொல்லி ஒரு கவிதையை வாசித்தார்.

எதைப்பற்றி வேண்டுமானாலும்
எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம்
என்னை எழுதியவள் நீ
உனக்கு என்ன எழுத?!

என்று நெகிழ்ச்சியோடு கேட்டார் ஈரோடு மகேஷ். விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் பலரது கண்களையும் குளமாக்கியது இந்த நிகழ்வு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+