Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சங்கீதா வைத்த குற்றச்சாட்டு, உண்மையை நிரூபிக்க விஜய் திரிஷாவுடன் என்ட்ரி! பின்னணி சம்பவம்! நடிகர் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் குறித்து கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அவரது குடும்ப வாழ்க்கை தொடர்பான தகவல்கள் வெளிவந்த பிறகு இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய பேசுபொருளாக மாறியது.

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியானது. அந்த மனுவின் விவரங்கள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வெளிச்சத்துக்கு வந்தபோது அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும், அந்த தொடர்பு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தியதாகவும் சங்கீதா குறிப்பிட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்த தகவல் வெளியாகியவுடன் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்தன.

Vijay Trisha Sangeetha Arun Raja

விஜய் திரிஷா கலந்துகொண்ட திருமணம்

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகை திரிஷா உடன் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி பரபரப்பை மேலும் அதிகரித்தது. அந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக வந்தது மட்டுமல்லாமல், ஒரே நிகழ்ச்சியில் அருகருகே நின்று பேசிக்கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டன. இதையடுத்து பலரும் அந்த சம்பவத்தை விவாகரத்து சர்ச்சையுடன் இணைத்து பேச ஆரம்பித்தனர்.

நடிகர் அருண் ராஜா வீடியோ

இந்த சூழ்நிலையில் சீரியல் மற்றும் திரைப்பட நடிகரான அருண்ராஜன் இந்த விவகாரம் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அவர் ஏற்கனவே பல முறை விஜய்க்கு ஆதரவாக வீடியோக்கள் வெளியிட்டு வந்தவர். சமீபத்தில் நடிகை ஜூலி விஜயை விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டபோதும் அதற்கு பதிலடி அளித்து பேசினார். இப்போது விஜய் மற்றும் திரிஷா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் பேசும் போது அவர் கூறியதாவது: "நேற்று ஈவ்னிங் திரிஷாவுடன் விஜய் ஒரு ரிசப்ஷனில் கலந்து கொண்டாங்க. இந்த செய்திதான் இப்போ முழுக்க சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் இதைப் பற்றிதான் பேசுறாங்க. எங்க வீட்டிலேயே பெண்கள் எல்லோரும் இதைப் பற்றி கேட்கிறார்கள். 'எலக்ஷன் நேரத்தில் விஜய் ஏன் இப்படி பண்ணினார்?' என்று பேசுகிறார்கள்.

இந்த விஷயத்தை பற்றி நாமும் பேசவேண்டும். ஏன்னா விஜய் அண்ணா நம்ம வீட்டில் ஒருவரைப் போல ஆகிவிட்டார். அவருக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம குரல் கொடுக்க வேண்டும். ஏற்கனவே விஜய் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். அந்த மனுவில் அவர் சில குற்றச்சாட்டுகளையும் வைத்திருக்கிறார்.

குறிப்பாக ஒரு நடிகையுடன் தொடர்பு என்று சொல்லி விஜய் சார் கேரக்டரையும், அவருடைய இமேஜையும் கேள்விக்குறியாக்கும் வகையில் சில விஷயங்கள் கூறப்பட்டிருக்கிறது. இதைக் கேட்கும் போது எல்லோருக்கும் அதிர்ச்சி தான். அதுவும் தேர்தல் நேரத்தில் இது ஏன் நடந்தது என்பது பலருக்கும் குழப்பமாக இருக்கிறது.

இந்த நேரத்தில் விஜய் திரிஷாவுடன் ஒரு கல்யாண பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார் என்றால், தன்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு 'நான் இப்படித்தான்' என்று நேராக பதில் சொல்லும் விதமாக தான் அவர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

நான் இதை விஜய் சாருக்கு முட்டுக் கொடுக்கப் பேசவில்லை. ஆனால் அவருடன் பழகிய அனுபவத்தை வைத்து சொல்கிறேன். அவருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் அவருடைய கேரக்டர் பற்றி நல்ல விஷயங்களையே சொல்வார்கள். குழந்தைகளுடன் கூட அவர் அவ்வளவு அன்பாக விளையாடுவார். மிகவும் பாசமாக பழகுவார்.

ஆனால் இப்போது அவரை சுற்றி நடக்கும் விஷயங்கள் எல்லாமே ஒரு விதமான பரபரப்பாக தான் மாறி இருக்கிறது. இந்த நேரத்தில் நாம அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

அருண்ராஜன் வெளியிட்ட இந்த வீடியோவுக்கும் சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் கிடைத்துள்ளன. சிலர் அவருடைய கருத்தை ஆதரித்து "ஒரு மனிதரை முழு உண்மை தெரியாமல் விமர்சிக்கக் கூடாது" என்று கூறி வருகின்றனர். ஆனால் இன்னொரு தரப்பு ரசிகர்கள், "இது போன்ற நேரத்தில் இப்படி வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது தேவையில்லை" என்று விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருந்த சில நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் கூட, திருமண நிகழ்ச்சியில் திரிஷாவுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியான பிறகு அவருக்கு எதிராக கருத்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் இன்னும் பலர் விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

இதனால் விஜய் - திரிஷா சம்பந்தமான இந்த விவகாரம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதமாக மாறி, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+