Vijay TV: விஜய் டிவி சீரியல் நடிகைக்கு எளிமையான கல்யாணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? குவியுது வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் மூலம் பிரபலமான நடிகை அக்ஷயாவுக்கு இன்று அவருடைய நீண்ட நாள் காதலருடன் திருமணம் நடைபெற்று இருக்கிறது. தன்னுடைய திருமண வீடியோக்களை அக்ஷயா சோசியல் மீடியாவில் பகிர்ந்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள்.
பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை விடவும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்குத்தான் தற்போதைய காலகட்டத்தில் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். காரணம் சினிமாவில் நடிக்கும் நடிகையின் திரைப்படங்கள் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது சில வருடங்களுக்கு பிறகு ஒரு படம் வெளியாகும். அதனால் அந்த படம் வெளியாகும் சமயத்தில் மட்டும்தான் அந்த நடிகைகளின் முகம் ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.

அதற்குப் பிறகு இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று சொல்ல வைத்து விடுகிறது. ஆனால் சீரியலில் நடிக்கும் நடிகைகள் சீரியல் மூலமாக தினமும் ரசிகர்களின் முன்பு வந்து கொண்டே இருக்கிறார்கள். போதாத குறைக்கு சோசியல் மீடியாவிலும் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் குவித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் சின்னத்திரை நடிகைகள் ரசிகர்களுக்கு அதிகமாக நெருக்கமாகி விடுகிறார்கள்.
அது மட்டும் அல்லாமல் எந்த சீரியல் ஒரு சேனலில் டாப்பில் ஓடுகிறதோ அதே சீரியல் பிரபலங்களை வைத்து அந்த சேனலில் ஏதாவது ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி அதிலும் இவர்களை போட்டியாளர்களாக மாற்றி விடுகிறார்கள். இதனால் சின்னத்திறையில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்களாக இருக்கிறார்கள். அதே போலத்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் சீரியலில் கதாநாயகியாக நடித்த அக்ஷயாவுக்கும் அதிகமான ரசிகர்கள் உண்டு.
அக்ஷயா தமிழில் ஆஹா கல்யாணம் முழம் தான் பிரபலமானார். அந்த சீரியல் 600 எபிசோடு மேலாக ஒளிபரப்பாகி வந்தது சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது சீரியல் முடிவடைந்த சமயத்தில் இவர் திருமணமும் செய்து இருக்கிறார். அக்ஷயா ஆஹா கல்யாணம் சீரியலுக்கு முன்பு நடிகை குஷ்பு நடித்த மீரா என்ற சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். ஆனால் அந்த சீரியல் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அந்த நேரத்தில் நடிகர் ஜெய் ஆகாசுடன் அமைச்சர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படமும் அவருக்கு பிரபலம் கொடுக்கவில்லை என்பதால் தான் அவர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார்.
அதேபோல அக்ஷயாவின் சொந்த ஊர் கோயம்புத்தூர் தான். சோசியல் மீடியா மூலமாக பிரபலம் ஆகித்தான் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். ஆஹா கல்யாணம் சீரியல் முடிவடைந்ததும் அக்ஷயாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவருடைய நீண்ட நாள் காதலரான ஜெய் என்பவருடன் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று நவம்பர் 30ஆம் தேதி எளிமையாக திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இந்த திருமணத்தில் இரண்டு குடும்பத்தின் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதிகமான திரை பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டது போல தெரியவில்லை. அக்ஷயா தன்னுடைய திருமண வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications