அப்பவே அப்படி தானா?? பிரியங்காவை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
சென்னை: தொகுப்பாளரான பிரியங்காவின் போட்டோவை பார்த்து அவருடைய ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றார்கள்.
குழந்தை பருவ பிரியங்காவின் போட்டோவை பார்த்த ஒரு சில ரசிகர்களுக்கு அவரை அடையாளம் காணவே முடியவில்லை என்று புலம்பி வருகிறார்கள்.
தம்பியோடு இருக்கும் பிரியங்காவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் பாசத்தை ஆறாக ஓட விடுகிறார்கள்.

பலருக்கும் பரிட்சயமான முகம்
விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா தேஸ்பாண்டே எனும் பெயரை சொன்னதுமே டக்கென்று பலருக்கும் நினைவிற்கு வந்துவிடும். பிரியங்கா தொகுப்பாளராக பலருக்கும் பரீட்சயமாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்காகவே ஒரு சிலர் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருவதாகவும் கூறி வருகிறார்கள். சினிமா கதாநாயகிகளுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை போலவே இவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

வெற்றியோடு திரும்பிய பிரியங்கா
எப்போதுமே கலகலப்பாக இருக்கும் பிரியங்காவை பார்த்த பல ரசிகர்கள் அவரை பாலோ பண்ண தவறுவதில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தியை கேட்டதும் பலர் ரசிகர்கள் இந்த வேலை எல்லாம் நமக்கு வேண்டாம் என்று எவ்வளவோ கூறி வந்தனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தங்களுக்கு பிடித்த பிரியங்காவை பற்றி பலரும் பலவிதமாக பேசுவார்கள் என்பது தான் பலருடைய வாதமாக இருந்தது. ஆனால் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பலருக்கும் ஃபேவரைட் போட்டியாளராக வெற்றி பெற்று பிரியங்கா தன்னுடைய திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்.

ரசிகர்களின் பாசமழை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கூட பிரியங்கா தன்னுடைய தம்பியின் மீது வைத்திருக்கும் பாசத்தை பலமுறை கூறிக் கொண்டே இருந்தார். தற்போது பிரியங்கா தன்னுடைய தம்பியுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரியங்காவின் தீவிரமான ரசிகர்கள் இந்த போட்டோக்களை ஷேர் செய்து கமெண்ட்களையும் லைக்குகளையும் மலை போல குவித்து வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த ஆதரவை பார்க்கும் போது தான் அவருடைய ரசிகர்கள் பட்டாளம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பரலரால் புரிந்து கொள்ள முடிந்தது.

ரசிகர்களின் பீலிங்
தற்போது பிரியங்கா தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் குழந்தை பருவத்தில் எவ்வளவு க்யூட்டாக இருக்கிறீர்கள் என்று கொஞ்சி வருகிறார்கள். அதே வேளையில் ஒரு சில நெட்டிசன்கள் அப்போவே இந்த வாய் இப்படி தானா??எதற்கும் மூடாதா?? என்று பிரியங்காவின் சிரிப்பை பார்த்து கலாய்த்து இருந்தாலும், அவருடைய தம்பியுடன் இவர் இருப்பதை பார்த்து எனக்கு இப்படி ஒரு அக்கா இல்லையே என்று ஒரு சிலர் பீலிங்கை கண்ணீராக கொட்டுகின்றனர்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications