உழைப்பிற்கு பலன் கிடைத்து விட்டது...புது வீட்டில் பால் காய்ச்சி நெகிழ்ச்சியில் நிஷா செய்த செயல்..!
அறந்தாங்கி நிஷா பல வருடங்களாக கட்டிக் கொண்டிருந்த வீட்டு வேலை முடிவடைந்து வீட்டில் பால் காய்ச்சி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் அறந்தாங்கி நிஷா சமீபத்தில் திருச்சியில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார்.
தன்னுடைய பல நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் அந்த புது வீட்டில் பால் காய்ச்சி ஃபங்சன் கொண்டாடி இருக்கிறார்.
அறந்தாங்கி நிஷாவின் புது வீட்டில் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரால் பார்க்கப்பட்டு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

புது வீடு
விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் காமெடி பிரபலமாகவும் இருந்து வரும் அறந்தாங்கி நிஷா தற்போது திருச்சியில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். இதுவரைக்கும் பல வீடு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி இதுதான் அறந்தாங்கியில் நிஷாவின் வீடு என்று வெளியான நிலையில், அதுவெல்லாம் போய் இதுதான் என்னுடைய உண்மையான வீடு. தற்போது வீட்டு வேலை நடந்து வருகிறது என்று சமீபத்தில் வீடியோ ஒன்றை அறந்தாங்கி நிஷா வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் வீட்டின் வேலைகள் முக்கால்வாசி முடிவடைந்த நிலையிலேயே வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்தி இருக்கிறார்.

பலருடைய பாராட்டு
அறந்தாங்கி நிஷாவின் வீட்டில் கிரகப்பிரவேசத்தில் மத குருமார்களை வைத்து சில சடங்கு முறைகளை செய்து இருக்கிறார். அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நிஷா பகிர லட்சக்கணக்கான மக்கள் பார்த்து அதிகமாக வாழ்த்துக்களை பெற்று பகிரப்பட்டு வருகிறது. தன்னுடைய சொந்தமான சம்பாத்தியத்தில் சிறுக சிறுக சேமித்து இந்த வீட்டை பல வருடங்களாக கட்டி இருக்கிறேன் விரைவில் பணி முடிவடைந்ததும் மீண்டும் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என்று கூறியிருக்கும் நிஷா தன்னுடைய வீட்டில் பால் காய்ச்சி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் கூப்பிட்டு பங்க்ஷன் நடத்தி இருக்கிறார்.

பட்டிமன்ற பேச்சாளர்
விஜய் டிவியில் இருக்கும் காமெடிகளில் ஒருவராக அறந்தாங்கி நிஷா இருந்து வருகிறார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்காக தேடி வந்து ஆரம்பத்தில் பட்டிமன்றங்களில் பேசிக்கொண்டிருந்து பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெண் காமெடி போட்டியாளராக விஜய் டிவியில் அறிமுகம் ஆகி தற்போது தொகுப்பாளராகவும் பல சீரியல்களில் நடித்தும் வருகிறார். குறிப்பாக சமீபத்தில் முடிவடைந்த பாரதிகண்ணம்மா சீரியலிலும் நிஷா நடித்திருந்தார். தற்போது திரைப்படங்களிலும் நிஷா நடித்து வருகிறார்.

உழைப்பால் கிடைத்த பொக்கிஷம்
வெள்ளிதிரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் பெண் காமெடி நடிகைகள் குறைவாகத்தான் இருக்கின்றனர். அவர்களில் ஒருவராக நிஷா மாறி இருக்கிறார். விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் நிஷா கலந்து கொள்வது வழக்கமாக மாறி இருக்கிறது. தற்போது தொகுப்பாளராகவும் மாறி இருக்கிறார். குறிப்பாக கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளராக மாறி நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தை கூட்டி இருக்கிறார். அவர் அறிமுகமான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இப்போது தொகுப்பாளராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் அவருடைய சொந்த வீடு பல வருட உழைப்பினால் கிடைத்த பொக்கிஷம் அதை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி செய்து தனக்கு மேலும் ஆசீர்வாதம் வழங்கும்படி வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications