பாக்கியலட்சுமி: ஆகாஷை வைத்து பிரச்சனை செய்த நிதிஷ்.. இனியாவுக்காக பாக்யா, கோபி செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை 10ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவிற்க்காக மொத்த குடும்பத்தினரும் நிதிஷிடமிருந்து விவாகரத்து வாங்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். ஆனால் இனியா நிதிஷ் பற்றி சில உண்மைகளை ஆகாஷிடம் மனம் திறந்து பேசுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா வீட்டில் இருக்கும் எல்லோரையும் கூப்பிட்டு சுதாகர் வீட்டில் என்ன நடந்தது என்று கேட்க, ஈஸ்வரி நடந்த விஷயத்தை சொல்கிறார். அப்போது அந்த சுதாகர் என்னுடைய ஹோட்டலுக்கு வந்து பேசினார் என்று பாக்யா சொன்னதும், இது எல்லாத்துக்கும் விவாகரத்து தான் முடிவாக இருக்கும் என்று இனியா சொல்கிறார். நான் அவர் கூட வாழ்ந்த கொஞ்ச நாளில் அவரை பத்தி புரிஞ்சுகிட்டேன். அவர் கிட்ட எதையாவது செய்யக்கூடாது என்ற என்று சொன்னாலே அவர் மீண்டும் மீண்டும் பண்ணுவாரு.

Baakiyalakshmi Serial vijay TV

நீங்க அவர் வீட்டில் போய் அவரை என்னை சந்திக்க கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க ஆனா அவர் மீண்டும் மீண்டும் என்னை சந்திக்க தான் முயற்சி பண்ணுவார். என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருப்பார் என்று சொல்ல, குடும்பத்தினர் எல்லாரும் யோசித்து விவாகரத்து செய்திடலாம் என்று முடிவெடுக்கின்றனர். மறுபக்கத்தில் ரூமில் பாக்கியா படுத்துக் கொண்டிருக்க இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது நீ தூங்கலையா அம்மா என்று கேட்க இல்லை என்று பாக்யா சொன்னதும் இனியா வேலைகளை முடித்துவிட்டு பாக்யாவிடம் பேசுகிறார். அப்போது பாக்கியா இனியாவிடம் நிஜமாகவே நீ சந்தோஷமா இருக்கியா இனியா என்று கேட்க நான் சந்தோஷமா தான் இருக்கிறேன். கொஞ்ச நாளா என்னை பத்தி தான் இந்த வீட்ல எல்லாரும் பேசிட்டு இருக்கீங்க கொஞ்சம் வேற எதையாவது மாற்றி பேசலாம், ரெஸ்டாரன்ட் எப்படி போகுது என்று கேட்கிறார்கள்.

ஒரு மாதிரி போயிட்டு தான் இருக்கு பெருசா லாபம் இல்லை என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கும் போது மீண்டும் பாக்கியா இனியாவிடம் நீ நல்லா இருக்கியா என்று கேட்கிறார் அதற்கு எனக்கு இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஏதாவது பிரச்சனை என்றால் சொல்றேன் என்று சொல்கிறார். மறுநாள் காலையில் செழியன், பாக்கியா, இனியா, கோபி, நான்கு பேரும் அட்வகேட்டை பார்க்க போகின்றனர்.

வக்கீலிடம் விவாகரத்து வாங்குவதில் இனியா உறுதியாக இருக்கிறார். அதோடு தன்னுடைய அம்மாவை ஏமாற்றி வாங்கிய இரண்டு ரெஸ்டாரண்டையும் திருப்பி வாங்கணும் என்றும் இனியா சொல்கிறார். அதற்கு முதலில் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவோம் அவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு தெரிஞ்சுட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு பேசலாம் என்று சொன்னதும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

அடுத்ததாக பாக்கியாவும் செல்வியும் ரெஸ்டாரண்டில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வக்கீலை பார்த்த விஷயம் பற்றி செல்வியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இனியா ரொம்ப பாவம் முகத்தை என்னால பார்க்கவே முடியவில்லை என்று பாக்கியா சொல்ல இனியா உன்னோட பொண்ணு நீ டைவர்ஸ் பண்ணிட்டு சந்தோசமா இல்லையா என்று செல்வி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கோபி இனியாவிடம் நம்ம வேணா ஈசிஆர் வரைக்கும் லாங் டிரைவ் போலாமா என்று கேட்க, நான் நார்மலா தான் இருக்கேன் டாடி என்று சொல்கிறார்.

அதோடு நான் இன்னும் படிக்க போறேன் என்று இனியா சொல்ல இனி உன்னுடைய மனதில் என்ன பண்ணனும் தோணுதோ அதை பண்ணுமா என்று கோபி சொல்கிறார். பிறகு ஹோட்டலில் செல்வியும் ஆகாஷும் வேலை பார்த்துக் கொண்டிருக்க இனியா அங்கு வருகிறார். செல்வி அழைத்து உட்கார வைக்க அம்மா இல்லையான்னு என்று இனியா கேட்கிறார். கடை வரைக்கும் போயிருக்காங்க என்று சொல்லிவிட்டு இனியாவை பார்த்ததும் செல்வி கண் கலங்குகிறார்.

அதற்கு வீட்லதான் எல்லாரும் இப்படி பண்றாங்கன்னு நீங்களும் இப்படியா பண்ணுறீங்க என்று இனியா கேட்கிறார். பிறகு ஆகாஷிடம் படிப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அதோடு தன்னுடைய வாழ்க்கை குறித்து வருத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் நிதிஷ் அங்கு வந்து ஆகாஷுடன் பேசுவதை பார்த்து கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+