பாக்கியலட்சுமி: சுதாகரிடம் நறுக்குன்னு இனியா கேட்ட கேள்வி! மனம் மாறிய கவுன்சிலர், பாக்யாவிடம் சொன்ன விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 19ஆம் தேதிக்கான எபிசோடில் நிதிஷ் நிலைமை என்ன என்று சுதாகர் மற்றும் சந்திரிகாவிடம் ஆவேசமாக கேள்வி கேட்கிறார். தன்னால் நிதிஷ் நிலைமை இப்படி மாறவில்லை, அவருக்கு வேற ஏதோ பிரச்சனை இருக்கு அதை நீங்க மறைக்கிறீங்க என்று இனியா வாக்குவாதம் செய்கிறார். அதே நேரத்தில் இதுவரைக்கும் பாக்யாவுக்கு பிரச்சனை கொடுத்து வந்த கவுன்சிலர் மனம் மாறி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், இரவு லேட் ஆகிவிட்டது என்று கதவை பூட்டுவதற்கு தயாராகிறார். அப்போது கோபி வந்து என்னை மன்னிச்சிடு பாக்கியா, நான் இன்னைக்கு அம்மாகிட்ட கொஞ்சம் கோபமா பேசிட்டேன். அவங்க அதனால கோபமா இருக்காங்க அவங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்ல பாக்கியா சரி என்று சொல்கிறார். இதனால் கோபி வீட்டிற்குள் வந்து ஈஸ்வரி இருக்கும் ரூம் கதவை தட்ட ஈஸ்வரி திறக்காமல் இருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கோபத்தில் ஈஸ்வரி

நீங்க தூங்கலன்னு எனக்கு தெரியும். சாரிமா என்று கோபி சொல்லிக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் ஈஸ்வரி பாக்கியா நீ இங்க தான் இருக்கேன்னு தெரியும். அவனை போக சொல்லு, நான் பேசவில்லை என்று கோபமாக பேசுகிறார். அதனால கோபியும் நாளைக்கு வந்து பேசுகிறேன் என்று கிளம்பி விடுகிறார். மறுபக்கத்தில் நிதிஷ் இருக்கும் ரூம் கதவு பூட்டப்பட்டிருப்பதால் இனியா கதவை திறக்க முயற்சி செய்கிறார்.

இனியா கேட்ட கேள்வி

அப்போது அங்க வந்த சந்திரிகா என்ன பண்ணுற? உனக்காகத்தான் இவனை வீட்டுக்குள் வைத்து பூட்டி வச்சிருக்கேன் என்று சொல்ல, இங்க ஏதோ நடக்குது? நீங்க என்கிட்ட மறைக்கிறீங்க? என்று இனியா சொல்ல, உன் மேல தான தப்பு அதனால் தான் அவன் கோபத்தில் இருக்கிறான் என்று சொல்ல, நான் எந்த தப்பும் பண்ணலையே என்று இனியா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சுதாகர் வந்து அவரும் உன் கேரக்டர் என்று சொல்ல வர, அதற்கு கோபமான இனியா என் கேரக்டரில் எந்த தப்பும் கிடையாது.

சுதாகர் மிரட்டல்

நீங்க தான் எதையோ என்கிட்ட மறைக்கிறீங்க. நான் ஆகாஷிடம் நல்லா இருக்கியா? என்று தான் கேட்டேன். வேற எதுவும் பேசலையே என்று சொல்லிவிட்டு கோபமாக கிளம்பி விடுகிறார். இனியா போனதும் சுதாகர் சந்திரிகாவிடம் இனியா எல்லாத்தையும் கேட்டுட்டு தலையாட்டிட்டு போற பொண்ணு கிடையாது. அவள் கேள்வி கேட்பா. அதற்குள் உன் பையனை ஒழுங்கா திருந்தி வாழ சொல்லு. இல்லன்னா நான் கல்யாணத்துக்காக பட்ட கஷ்டம் எல்லாம் வீணாப்போயிடும் என்று சொல்கிறார்.

பாக்கியாக்கு வந்த சந்தேகம்

மறுபக்கத்தில் பாக்கியா ஹோட்டலில் இருக்கும் போது செல்வியிடம் இன்னைக்கு கொஞ்சம் சாப்பாடு எக்ஸ்ட்ரா செய்யணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இனியா போன் செய்ய இனியாவின் குரல் சோகமாக இருப்பதை கவனித்ததும் பாக்யா என்னாச்சு என்று கேட்கிறார். அதற்கு இனியா ஒன்னும் இல்ல ஆபீஸில் ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தாங்க அதுதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு என்று சமாளிக்கிறார்.

மன்னிப்பு கேட்ட கவுன்சிலர்

பிறகு இனியா போனை வைத்ததும் பாக்யா செல்வியிடம், பிள்ளைகளை கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் அவங்க என்ன பண்ணுறாங்க என்று பயமாகவே இருக்கு என்று பாக்யா சொல்லி கொண்டே சரி நான் வெளியே போயிட்டு வரேன் என்று கிளம்புகிறார். அப்போது ஒரு பெண் மயக்கம் போட்டு விழுந்து விட, அந்த பெண்ணை பாக்கியா காப்பாற்றுகிறார். பிறகு சிறிது நேரம் கழித்து பாக்யாவுக்கு தொந்தரவு கொடுக்கும் கவுன்சிலர் வந்து பாக்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார். நான் இதுவரைக்கும் உங்களுக்கு எத்தனையோ தொந்தரவு கொடுத்திருக்கிறேன், ஆனால் நீங்க எனக்கு நல்லது பண்ணி இருக்கீங்க. நீங்க இன்னைக்கு காப்பாத்துனது என்னுடைய மனைவிதான் என்று பாக்கியாவிடம் தான் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+